செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தின் அனைத்துக் கட்டப் பணிகளும் முடிவடைந்த நிலையிலும், பல்வேறு காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் படம் மார்ச் 5ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் இந்தப் படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
அதன்காரணமாக இப்படத்திற்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டது. அதையடுத்து, ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்திடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி, அதில் உடன்பாடு ஏற்பட்டதால், படத்திற்கான தடை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன்படி இப்படம் நாளை (மார்ச் 5) வெளியாகிறது. இதுகுறித்து நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா தனது ட்விட்டரில் 'படத்திற்காக வேண்டிக்கொண்ட ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. நம்ம படம் உண்மையாவே ரிலீஸ் ஆகுதுங்க' என்று பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: தடைகளை தாண்டி திட்டமிட்டபடி வெளியாகும் 'நெஞ்சம் மறப்பதில்லை'!