ETV Bharat / sitara

சூரரைப் போற்று படத்தில் சூர்யா புலியாக பாய்வார் - சிவக்குமார் பேச்சு - Actor Sivakumar praises Suriya

சென்னை: சூர்யா ஒரு புதையல். அவரது அமைதியானது புலி பதுங்கிக்கொண்டிருக்கிறது என எடுத்துக்கொள்ளலாம். சூரரைப் போற்று படத்தில் அது பாயப் போகிறது என்று நடிகர் சிவக்குமார் கூறினார்.

Soorarai Pottru single track release
Actor Sivakumar praises Suriya
author img

By

Published : Feb 15, 2020, 11:01 PM IST

சூரரைப் போற்று சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சூர்யாவை பற்றி நடிகர் சிவக்குமார் புகழ்ந்து பேசினார்.

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருக்கும் படம் 'சூரரைப் போற்று'. இந்தப் படத்தில் இடம்பெறும் பாடல்களில் ஒன்றான 'வெய்யோன் சில்லி' என்று பாடல் வெளியிடு ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடலாசிரியர் விவேக், நடிகர் மோகன் பாபு, சோனி மியூசிக் நிறுவனம் அசோக் ஆகியோர்களுடன் இணை தயாரிப்பாளர் ராஜசேகர், கற்பூர சுந்தரபாண்டியன், நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.

இதில் நடிகர் சிவக்குமார் பேசியதாவது:

நடிகனாக எனக்கு திருமணம் ஆனபோது, எனது குடும்பத்தில் மற்றொரு நடிகர் வருவார் என்று சத்தியமாக கனவில் கூட நினைத்தது இல்லை. கனவே காண முடியாத இடத்திலிருந்து இருந்த ஒரு பையன்தான் சூர்யா. கார்மெண்ட் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை பார்ப்பவராகத்தான் இருந்தார். ஆனால் இன்று ஒரு நடிகராக உருவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

Actor Sivakumar praises Suriya

எங்களைப் பொறுத்தவரை சூர்யா ஒரு புதையல்தான். அவர் அமைதியாக இருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். புலி பதுங்கிக் கொண்டிருக்கிறது. சூரரைப் போற்று படத்தில் பாயப் போகிறது என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.