SK 20 Update: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான டாக்டர் திரைப்படம், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்த இப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் அனைவரும் ரசித்தனர். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டான், அயலான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார், சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக முதல் முறையாகத் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜதி ரத்னலு படத்தை இயக்கிய அனுதீப் இப்படத்தை இயக்குகிறார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படம் தற்காலிகமாக SK 20 என அழைக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு நேற்று (ஜனவரி 1) புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியானது.
நகைச்சுவையாக உருவாகும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இதுகுறித்து இயக்குநர் அனுதீப் கூறுகையில், "திரைத்துறையிலுள்ள பெரிய நட்சத்திரக் குழுவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. நடிகர் சிவகார்த்திகேயனை நடிகராக அல்லாமல் ஒரு மேஜிஷியனாகவே நான் பார்க்கிறேன்.
-
Brooooo really happy to join with you 🤗🤗 waiting to dance for ur hit numbers 💥💥👍 https://t.co/HRKNSJQyzM
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Brooooo really happy to join with you 🤗🤗 waiting to dance for ur hit numbers 💥💥👍 https://t.co/HRKNSJQyzM
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 1, 2022Brooooo really happy to join with you 🤗🤗 waiting to dance for ur hit numbers 💥💥👍 https://t.co/HRKNSJQyzM
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 1, 2022
திரையில் அனைத்துத் தரப்பு பார்வையாளர்களையும், குறிப்பாகக் குழந்தைகள் முதல் குடும்பங்களிலுள்ள பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் அவரது திறமை, தமிழ்நாட்டைத் தாண்டி அவருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
இந்தப் படம் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு விருந்தாக இருக்கும்.
SK 20 படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காஜல் கணவரின் பதிவு - ரசிகர்கள் வாழ்த்து!