ETV Bharat / sitara

நம்ம வீட்டு செல்லப் பிள்ளை சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் - ஆங்கர் டூ ஆக்டர்

தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன் தன் 35வது பிறந்த நாளை இன்று (பிப்ரவரி 17) கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நம்ம வீட்டு செல்லப் பிள்ளை சிவகார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாட்டம்

author img

By

Published : Feb 17, 2022, 7:31 AM IST

சிவகார்த்திகேயன், எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் திறமை ஒன்றை மட்டும் வைத்து வெள்ளித் திரையில் கதாநாயகனாக ஜோலிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு. தமிழ்த் திரை உலகில் திரை உலக வாரிசுகளின் ஆதிக்கம் நிறைந்த காலகட்டத்தில் தன் திறமையை மட்டும் முதலீடாக்கிச் சாதித்துக் காட்டியவர்தான் இந்த SK எனும் சிவகார்த்திகேயன். இன்று 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு டிவிட்டரில் பல ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மெரினா, மூனு போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் தன்னை தனியே கவனிக்க வைத்தார். வெள்ளித்திரையில் மார்க்கெட் குறைந்தால் சின்னதிரை பக்கம் நடையைக் கட்டும் வழக்கத்தை மாற்றி சின்னதிரையிலிருந்து வெள்ளித்திரைக்கு மாஸ் எண்ட்ரி கொடுத்தார். நிகழ்ச்சி தொகுப்பாளர், காமெடியன், கதாநாயகன் என அனைத்திலும் அவருக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியவர்.

போஸ்பாண்டி டூ டாக்டர்

சிவகார்த்திகேயனுக்கு நகைச்சுவை இயல்பாகவே வரும் என்பதற்கு அவரது வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, போன்ற படங்களே சான்று. காமெடியை தாண்டி நம்ம வீட்டுப் பிள்ளையில் ஒரு எமோஷனல் அண்ணனாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். கிராம கதைக்களமானாலும், சிட்டி பாய் சப்ஜெக்ட்டானாலும் வெளுத்து வாங்குவார். எந்த கதாபாத்திரத்திலும் தன்னை கச்சிதமாகப் பொருத்திக்கொள்ளும் திறன் கொண்டவர்.

காமெடி, எமோஷனல், டான்ஸ் எனப் பல விதத்திலும் மக்களை மயக்கிய சிவகார்த்திகேயனின் மாஸ், கிளாஸ் அவதாரம்தான் நெல்சனின் டாக்டர். வழக்கமான சிவகார்த்திகேயனை முற்றிலும் கதாபாத்திரமாக இருந்தது டாக்டர் பட வருண் பாத்திரம். தனக்கு காமெடி மட்டும் தான் வரும் என்பதை முற்றிலும் மாற்றி இப்போது அனைத்து தரப்பட்ட களத்திலும் அட்டகாசமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

ஆங்கர் டூ ஆக்டர்

அரபிக்குத்து ஹலமீது ஹபீபா
அரபிக்குத்து ஹலமீது ஹபீபா

நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் எனப் பல பரிணாமத்தையடுத்து பாடலாசிரியராகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறார். “ எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துருச்சு” பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்தது. தற்போது அரபிக்குத்து ஹலமீது ஹபீபா பல கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

தந்தைக்கு சற்று இளைக்காத செல்ல மகள்தான் ஆராதனா சிவகார்த்திகேயன். அவர் தன் செல்லக்குரலில் பாடிய வாயாடி பெத்த புள்ள பாடலை இன்னும் பல்லாயிரக்கணக்கானோரால் ரசித்து கேட்டு கொண்டு இருக்கிறார்கள்.

ஆராதனா சிவகார்த்திகேயன்
ஆராதனா சிவகார்த்திகேயன்

ஆங்கர் டூ ஆக்டர் எனத் திரை உலகின் பல துறைகளிலும் தனி இடத்தை பிடித்த சிவகார்த்திகேயன் திரைத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார். தமிழ் நாட்டின் பெண்கள், குழந்தைகள், தாய்மார்கள் என ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளத்தையும் தன் வசமாக்கிக் கொண்ட தமிழ் திரை ரசிகர்களின் செல்லப்பிள்ளை சிவகார்த்திகேயனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இதையும் படிங்க:பீப் பாடல் விவகாரம்: சிம்பு மீதான வழக்கு ரத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.