ETV Bharat / sitara

தேனி நாயகன் சென்றாயன்! - பொல்லாதவன் சென்றாயன் பிறந்தநாள்

தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை பிடித்து, தனது நகைச்சுவை திறனால் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள நடிகர் சென்றாயன் இன்று (ஜூலை 30) தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

சென்றாயன் பிறந்தநாள்
சென்றாயன் பிறந்தநாள்
author img

By

Published : Jul 30, 2021, 10:21 AM IST

Updated : Jul 31, 2021, 11:20 AM IST

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் சென்றாயன். சினிமா மீது தீராத காதல் கொண்ட இவர், சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை பிடிக்க விரும்பினார். அவரது விடா முயற்சியின் காரணமாகவே தற்போது அவர் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

தனது சினிமா கனவை நினைவாக்கிய சென்றாயன், ஒரு வேலை சாப்பாடு கிடைக்கும் என்பதற்காக பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக பல மேடைகளில் ஆனந்த கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் திரைப்படம் மூலம் அறிமுகமான சென்றாயன் தொடரந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர் கூடம், மெட்ரோ உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சென்றாயன்
சென்றாயன்

ரசிகர்களுக்கு சிரிப்பு காட்டிவந்த சென்றாயன், ஜீவா நடிப்பில் வெளியான ரௌத்திரம் படத்தில் சீரியஸ் வில்லனாக நடித்து தனது நவரசத்தையும் காட்டியிருப்பார். நயன்தாரா- மம்முட்டி நடிப்பில் வெளியான வாசுகி (மலையாளத்தில் புதிய நியமம்) படத்தில் முக்கிய காட்சியொன்றில் தேனீ போல் கொட்டி அவர் செய்த விஷமத்தனம் மிரட்டல்

சென்றாயன்
சென்றாயன்

நகைச்சுவை, வில்லன் என தனது நடிப்பில் பட்டையை கிளப்பி வந்த சென்றாயன், மூடர் கூடம் என்ற படத்தில் மைக்கேல் ஜாக்சன் உடையில் மாஸாக டான்ஸ் ஆடி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருப்பார்.

சென்றாயன்
சென்றாயன்

பின்னர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்றாயன், தனது எதார்த்தமான பேச்சாலும், நகைச்சுவையான முகபாவனையாலும் போட்டியாளர்களையும், ரசிகர்களையும் மகிழ்வித்தார்.

சென்றாயன்
சென்றாயன்

சில நாள்களாக படவாய்ப்பு கிடைக்காமல் இருந்த சென்றாயன், தற்போது கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ் சினி உலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

சுல்தான்
சுல்தான்

தனது குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ள சென்றாயனின் பிறந்த நாளுக்கு அவரது குடும்பத்தினர், திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அஜித்துடன் சென்றாயன்
அஜித்துடன் சென்றாயன்

இதையும் படிங்க: ரிச் பாய்யாக ரீச் ஆன சென்றாயன் - புகைப்படத் தொகுப்பு!

Last Updated : Jul 31, 2021, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.