ETV Bharat / sitara

எஸ்.ஜே.சூர்யா- கோலிவுட்டிற்குக் கிடைத்த நியூ ஸ்டைல்

author img

By

Published : Jul 20, 2021, 7:31 AM IST

Updated : Jul 20, 2021, 11:03 AM IST

கோலிவுட்டில் இனி எத்தனை இயக்குநர்கள் வேண்டுமானாலும் வரலாம். எத்தனை புதிய முயற்சிகளை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், எஸ்.ஜே.சூர்யாவின் ”கதை கேட்டுவிட்டு படம் பார்” என்ற ஸ்டைலை தொட அனைவரும் அச்சப்படுவார்கள்.

எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா

தமிழ் சினிமாவில் கதை சொல்லலில் வித்தியாசம் காண்பித்தால் மட்டுமே ஒரு இயக்குநராக வெற்றிக் காண முடியும். அப்படி வெற்றி பெற்ற இயக்குநர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். அவர்களில் மிக முக்கியமானவர் இயக்குநர் எஸ்.ஜே சூர்யா. இப்படியும் படம் எடுக்கலாம், கதை யோசிக்கலாம் என சொல்லியவர் சூர்யா.

1999ஆம் ஆண்டு அஜித்தை வைத்து வாலி திரைப்படத்தை ஆரம்பித்தபோது, ஏன் அஜித்திற்கு வேண்டாத வேலை நல்லபடியாக கிராஃப் சென்றுகொண்டிருக்கும்போது எதற்காக இரட்டை வேடம் அதுவும் ஒரு புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் என எல்லோரும் நினைத்திருப்பார்கள் . ஆனால் எஸ்.ஜே.சூர்யா என்ற அசுர படைப்பாளி மீது அஜித் வைத்த நம்பிக்கைக்காகவே அவரை பாராட்ட வேண்டும்.

இந்த சமூகத்தில் அழுக்கற்ற மனம் என்று ஒன்றே ஒன்றுதான் உண்டு. அது குழந்தையின் மனம். குழந்தையிலிருந்து மனிதனாக உயர்ந்த பிறகு நமது மனம் கண்டிப்பாக சபலப்படத்தான் செய்யும். அதுவும் பெண்கள் விஷயத்தில் புராண காலத்திலிருந்தே சபலப்பட்ட கதைகளை படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். அந்த சபலத்தையும், நினைத்தால் அடைந்தே தீர வேண்டும் என்ற வெறியையும் கதைக்களமாக கையிலெடுத்தார் சூர்யா. அதுவரை அஜித் ஒரு சாக்லேட் பாய், காதல் மன்னன் என போற்றப்பட்டு வந்த சமயத்தில் வாலி திரைப்படம் வெளிவந்து அஜித்துக்குள் இருக்கும் மிரட்டலான வில்லனை அள்ளி எடுத்து கோலிவுட்டில் வைத்தது.

அஜித்
அஜித்

தம்பியின் மனைவியை அடைந்தே தீர வேண்டும் அதுவும் கன்னித் தன்மையோடுதான் அடைய வேண்டும் என்ற வெறியில் அஜித் நடித்தது அவரது நடிப்பில் மைல் கல். ஆனால் அந்த மைல் கல்லை உருவாக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. அந்த திரைப்படத்தை இப்போது கண்டாலும் இப்படி ஒரு கதையா என முகம் சுளிப்பவர்கள் உண்டு. ஆனால், அதுபோன்ற கதைகள் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதை முதலில் திரையில் கொண்டுவர வேண்டும் எண்ணியதற்கே சூர்யாவுக்கு கோலிவுட் ஒரு சல்யூட் அடிக்க வேண்டும். ஏனெனில், ஒரு படைப்பாளி என்பவன் கற்பனைகளை கதையாக உருவாக்குதல் வேறு, மனிதர்களின் எதார்த்த எண்ணங்களை கதையாக்குவது வேறு. எஸ்.ஜே.சூர்யா எதார்த்தத்தை படமாக்கும் படைப்பாளி. அவரது ஒரு காட்சியில்கூட எதார்த்தத்தை மீறாத படைப்பு இருக்காது.

வாலி என்ற சமூக கட்டமைப்புகளை மீறும் படைப்பை எடுத்துவிட்டு அடுத்து விஜய்யை வைத்து அவர் இயக்கிய குஷி திரைப்படம் இன்றுவரை 90ஸ் கிட்ஸ்களின் பொக்கிஷம் மட்டுமில்லை கோடம்பாக்கத்தின் பொக்கிஷம்.

எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா

அதற்கு காரணம் இல்லாமல் இல்லை, பொதுவாக ஒரு இயக்குநர் தனது திரைப்படத்தை ஆரம்பிக்கும்போது சஸ்பென்ஸ், த்ரில் வைத்து க்ளைமேக்ஸில் அதன் முடிச்சை அவிழ்த்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அனுப்புவார்கள். ஆனால், எஸ்.ஜே.சூர்யா குஷி திரைப்படத்தில், படத்தின் ஆரம்பத்திலேயே ”இவங்க ரெண்டு பேரும் சேரப்போறாங்க எப்டி சேரப்போறாங்க” இதுதான் கதை என படத்தின் டைட்டில் கார்டிலேயே கதையை சொல்லிவிட்டு ரசிகர்களை சர்ப்ரைஸோடு வரவேற்பார்.

ஒரு இயக்குநருக்கு இப்படி சொல்ல மிகப்பெரிய தைரியம் வேண்டும். தைரியம் என்பதைவிடவும் தன் மீதும் தனது கதை சொல்லும் முறை மீதும் அபார நம்பிக்கை வேண்டும். படத்தின் ஆரம்பத்திலேயே கதையை சொல்லி ரசிகர்களுக்கு படத்தின் கடைசி வரை சலிப்புத் தட்டாமல் திரைக்கதையை கொண்டு செல்வது எல்லாம் எஸ்.ஜே.சூர்யா ஆரம்பித்து வைத்த ட்ரெண்ட். அதனால்தான் குஷி கோடம்பாக்கத்தின் பொக்கிஷம்.

ஸ்டைலிஷ் எஸ்.ஜே.சூர்யா
ஸ்டைலிஷ் எஸ்.ஜே.சூர்யா

முக்கியமாக, ஹீரோ, ஹீரோயினை துணிக்கடையில் குழந்தைகளாக இன்ட்ரோ செய்தது, பள்ளிப்பருவத்தில் இருவரும் கேம்ப் செல்வது, எங்கோ இருக்கும் ஜோதிகாவின் ரத்தம் எங்கோ இருக்கும் விஜய்யுடன் சேர்வது என அதில் சூர்யா வைத்த ஒவ்வொரு காட்சியும் வேற லெவல். ஒரு காதலை, காதல் ஜோடியை, கதையின் லீட் ரோல்களை இப்படியும் கனெக்ட் செய்ய முடியும் என அவர் கோடம்பாக்கத்திற்கு புது இலக்கணத்தை சொல்லிக்கொடுத்தவர்.

குஷி திரைப்படம் நினைவுக்கு வந்தால் உடனடியாக, ஜோதிகாவின் இடையை விஜய் பார்க்கும் காட்சி நினைவுகளில் வந்துசெல்லும். ஆனால், அதையும்தாண்டி அத்திரைப்படத்தில் கொண்டாடப்பட வேண்டிய காட்சிகள் அவ்வளவு இருக்கின்றன. குறிப்பாக, விஜய்க்கு ஜோதிகா ஆஷ் ட்ரே வாங்கி தரும் காட்சி, ஜோதிகாவை தனது தந்தையிடம் விஜய் அறிமுகப்படுத்தும் காட்சி என அடுக்கிக்கொண்டே போகலாம்

குஷி
குஷி

காதலின் உத்தம நிலை தன்னை சுற்றி இருக்கும் சூழலை மறத்தல். ஆனால் அதையும் தாண்டிய உன்மத்த நிலை ஒன்று இருக்கிறது. அது தன்னையே மறந்து காதலிப்பவரை நினைப்பது. அப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் விஜய்யும், ஜோதிகாவும் இரண்டு ஆட்டோக்களில் இருந்தாலும் அவர்கள் தன்னை மறந்து மற்றொருவரை நினைத்திருப்பார்கள்.

அந்த காட்சியின் வெற்றி என்பது இருவரும் எதிரெதிரே இருந்தாலும் சந்தித்துக்கொள்ளாமல் இருப்பது என்றாலும் அதில் மற்றொரு வெற்றியும் ஒளிந்திருக்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே கதையை தெரிந்துகொண்டு, இவர்கள் எப்படியும் சேர்ந்துவிடுவார்கள் என்று தெரிந்துவைத்திருந்த ரசிகர்கள், “எப்படியாவது இவர்கள் இப்போதே பார்த்துக்கொள்ள வேண்டும்” என நினைத்து சீட் நுனியில் அமர்ந்திருப்பார்கள். அதுதான் அந்தக் காட்சியின் மற்றொரு வெற்றி. எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் மிகப்பெரிய மேக்கிங் பாய்ச்சலை செலுத்தியிருப்பார்.

அவரது படைப்புகளில் மிக முக்கியமானது “நியூ”. தற்போது அறிவியல் தொழில்நுட்பங்கள் திரையுலகை ஆண்டு கொண்டிருக்கின்றன. இப்போது எந்திரன்கள் வருவது சாதாரணமான ஒன்று. ஆனால் 2004ஆம் ஆண்டே அறிவியலை மையப்படுத்தி நியூ போன்ற திரைப்படங்கள் வருவதெல்லாம் அசாத்தியமான ஒன்று.

சிறுவனாக இருப்பவனுக்கு எப்போதுமே ஒரு ஆசை இருக்கும், நாம் இளைஞனாக மாறினால் எப்படி இருக்கும் என்பதுதான் அது. அந்த ஆசைகளை காட்சியில் நிஜமாக்கியிருப்பார் எஸ்.ஜே.சூர்யா. அந்த திரைப்படம் தற்போது வந்திருந்தால் அதன் ரீச் என்பது வேறு இடத்தில் இருந்திருக்கும். இருந்தாலும் என்ன? அறிவியலை வைத்து படமெடுக்கலாம் என்பதை அழுத்தம் திருத்தமாக முதலில் சொன்னவர் எஸ்.ஜே.சூர்யா.

எப்போதுமே, நமது நினைவு நமக்கு ஒன்றை சொல்லும், நிஜம் நமக்கு வேறொன்றை சொல்லும். நினைவால் நிஜத்தை மாற்ற முடியுமா. அது சாத்தியமா. ஆம் எஸ்.ஜே.சூர்யாவால் சாத்தியப்பட்டிருக்கிறது. நிஜத்தில் பிரியும் ஒரு காதல் ஜோடியின் நினைவில், “நாம் இணைந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்” என்ற நினைப்புதான் இருக்கும். அந்த நினைவுகள் ஒன்றுகூடி நிஜத்தை மாற்றி அமைக்குமா என்ற நமது ஏக்கங்களை, எண்ணங்களை ”அன்பே ஆருயிரே” திரைப்படத்தில் அவர் நிஜமாக்கி வைத்திருப்பார். சில பவுண்ட்ஸ் மூளையால் எப்படி இப்படி யோசிக்க முடிகிறது என மற்றவர்களை மிரளவைத்தவர் அவர்.

கோலிவுட்டிற்குக் கிடைத்த நியூ ஸ்டைல்
கோலிவுட்டிற்குக் கிடைத்த நியூ ஸ்டைல்

அவர் ஆபாசமாக படமெடுப்பார் அவரது திரைப்படத்தை குடும்பத்தோடு பார்க்க முடியாது என எஸ்.ஜே.சூர்யா மீது ஒரு அடையாளம் குத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இங்கு ஆபாசம் என்றால் ஏன் அனைவரும் முகத்தை சுளிக்கிறோம். ஆபாசம் இன்றி இங்கு எதுவுமே இல்லையே. நிர்வாணமும், ஆபாசமும்தானே ஆதி நாகரீகம். ஆபாசத்தை ஒதுக்க ஒதுக்கத்தான் தற்போது ஆபாச வெறி சமூகத்தை பீடித்து கொன்று கொண்டிருக்கிறது. ஆபாசமற்ற மனிதன் இங்கு எவரேனும் உண்டா. அனைவருக்கும் இருக்கும் அதை அனைவரும் வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதை சர்வசாதாரணமாக வெளிப்படுத்தியிருக்கிறார் சூர்யா. அதனால் அவர் மீது இந்த அடையாளம். ஆனால் அடையாளம் உடைத்த படைப்பாளி அவர்.

தற்போதைய சினிமா வேறுவிதமாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. முதல் பாதியில் கதையை சொல்லி முடிச்சு போட்டு இரண்டாம் பாதியில் அந்த முடிச்சை அவிழ்த்து சர்ப்ரைஸ் கொடுக்கவேண்டும். அப்போதுதான் அந்த இயக்குநர் வெற்றி பெறுகிறார். படத்தின் ஆரம்பத்திலேயே கதையை சொல்லி ரசிகர்களை கட்டிப்போட்ட வித்தைக்கு சொந்தமான சூர்யாவுக்கு இந்த புதிய வித்தையை சொல்லிக்கொடுக்க வேண்டுமா என்ன?”இசை” திரைப்படத்தில் வேறு விதமாக வந்தார் சூர்யா.

படம் முழுக்க இரு இசையமைப்பாளர்களுக்கு இடையே நடக்கும் மோதலை படமாக்கிவிட்டு கடைசியில் இப்படி ஒரு கதை எடுத்தா எப்படி இருக்கும் என்று கனவு கண்டேன் என்று சொல்லி ரசிகர்களை முட்டாள் ஆக்கியிருப்பார். யாரேனும் நம்மை முட்டாள் ஆக்கினால் கோபம்தான் வரும். ஆனால், ”எஸ்.ஜே.எஸ்” இசையில் ரசிகர்களை முட்டாளாக்கியது ரசிகர்களாலேயே கொண்டாடப்பட்டது.

இப்படி பல புதுபுது முயற்சிகளுக்கு அட்ரஸ் எழுதிய இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகர் எஸ்.ஜே.சூர்யாவாக அதகளம் செய்துகொண்டிருக்கிறார். இறைவியில் அவர் நடித்த நடிப்பு காலம் கடந்தும் பேசப்படும். ஒரு குடிகாரனாக நடித்தாரா இல்லை குடித்துவிட்டு நடித்தாரா என்று ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பார். நடிகனாக ஆசைப்பட்டு வந்தவர்தானே அவர். ஸ்பைடர் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் ஆகச்சிறந்த வில்லன் கதாபாத்திரத்தில் ஒன்று.

குறிப்பாக, செல்வராகவன்-எஸ்.ஜே.சூர்யா மிகப்பெரிய இயக்குநர்கள். செல்வா இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அதில் அவரின் நடிப்பை கண்ட அனைவரும் எழுப்பிய ஒரே கேள்வி இவருக்குள் இப்படி ஒரு அசுர நடிகனா என்பது. அந்த ட்ரெய்லரிலும், படத்தின் மொத்த கதையையும் எஸ்.ஜே.சூர்யா தனது குரலிலேயே கூறியிருப்பார். இது அவருக்கு தானாகவே அமைகிறது.

எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா

கோலிவுட்டில் இனி எத்தனை இயக்குநர்கள் வேண்டுமானாலும் வரலாம். எத்தனை புதிய முயற்சிகளை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், எஸ்.ஜே.சூர்யாவின் ”கதை கேட்டுவிட்டு படம் பார்” என்ற ஸ்டைலை தொட அனைவரும் அச்சப்படுவார்கள். ஏனெனில் அதற்கு தன் மீது தன் படைப்பு மீதும் வெறி பிடித்த நம்பிக்கை வேண்டும். ரஜினிக்கு எப்படி ஒரு ஸ்டைலோ, இயக்குநர் ஷங்கர், மணிரத்னம் போன்றோர்களுக்கு எப்படி ஒரு ஸ்டைலோ அதுபோலதான், கதையை கேட்டுவிட்டு படத்தை பார் என்ற ஸ்டைலும் தனி அடையாளம். ஏனெனில் அது எஸ்.ஜே.சூர்யாவின் ஸ்டைல்... பிறந்தநாள் வாழ்த்துகள் எஸ்.ஜே.சூர்யா...

இது ஏற்கனவே வெளியான கட்டுரை என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jul 20, 2021, 11:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.