கரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் இன்று (ஏப்ரல் 14) ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருந்தது. இதற்கிடையில் மேலும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ”வெளிநாடுகளில் வாழும் தமிழ்நாடு மக்களுக்கு இந்தப் புதிய ஆண்டு இனிதான் ஆண்டாக இருக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். கரோனா வைரஸால் முழு உலகமுமே பாதிக்கப்பட்டுள்ளது.
-
உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துகள். 🙏🏻 #StayHomeStaySafe #PracticeSocialDistancing #இதுவும்_கடந்து_போகும் #EvenThisWillPass pic.twitter.com/hkwLqORr8q
— Rajinikanth (@rajinikanth) April 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துகள். 🙏🏻 #StayHomeStaySafe #PracticeSocialDistancing #இதுவும்_கடந்து_போகும் #EvenThisWillPass pic.twitter.com/hkwLqORr8q
— Rajinikanth (@rajinikanth) April 14, 2020உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துகள். 🙏🏻 #StayHomeStaySafe #PracticeSocialDistancing #இதுவும்_கடந்து_போகும் #EvenThisWillPass pic.twitter.com/hkwLqORr8q
— Rajinikanth (@rajinikanth) April 14, 2020
இதற்கு, இந்தியாவும், தமிழகமும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் உங்களைப் பிரிந்து வாழும் உறவினர்கள், எந்நேரமும் உங்களைப் பற்றியே கவலை கொண்டுள்ளனர். நீங்கள் எந்த நாட்டில் வசிக்கிறீர்களோ, அந்நாட்டின் அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடியுங்கள். அப்படி கடைப்பிடித்து உங்களைப் பாதுகாத்து கொள்வதே குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் நீங்கள் தரும் இந்த ஆண்டின் பரிசு. நலமுடன் வாழுங்கள். கவலைப்படாதீர்கள். இதுவும் கடந்து போகும்” என்று பேசியுள்ளார்.
இதையும் படிங்க: சுவரின் மேல் கால் வைத்து உடற்பயிற்சி மேற்கொள்ளும் பூஜா