ETV Bharat / sitara

தலைவா.. தலைவா... ரசிகர்கள் வாழ்த்து மழையில் டெல்லி சென்றார் ரஜினிகாந்த்! - நடிகர் ரஜினிகாந்த்

டெல்லியில் திங்கள்கிழமை (ஆக.25) நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் டெல்லி புறப்பட்டு சென்றார். இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.

டெல்லி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்
டெல்லி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்
author img

By

Published : Oct 24, 2021, 11:53 AM IST

சென்னை : தேசிய திரைப்பட விழா நாளை (அக்.25) டெல்லியில் நடைபெறுகிறது. இந்த விருது விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு இந்தியத் திரைத்துறையில் மிக உயரிய தாதாசாகேப் பால்கே (வாழ்நாள் சாதனையாளர்) விருது வழங்கப்படுகிறது.
தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்துக்கு 51ஆவது தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக ஒன்றிய அரசு ஏப்ரலில் அறிவித்தது. மேலும் நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், நடிகர் விஜய்சேதுபதிக்கு (சூப்பர் டீலக்ஸ்) சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்படவுள்ளது.

டெல்லி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் விஸ்தாரா விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, இன்று காலை 7:00 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் டெல்லி புறப்பட்டனர்.

இதையும் படிங்க : 'விருதை எதிர்பார்க்கவில்லை, கே.பி. சார் இல்லாதது வருத்தம்'- தாதா சாகேப் ரஜினிகாந்த்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.