சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த்திற்கு சிறுநீரக பிரச்னை ஏற்பட்டது. இதனையடுதது சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனைத்தொடர்ந்து சிகிச்சைக்காக அவர் அமெரிக்காவும் சென்றார்.
இந்நிலையில், கரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்தது.
இதனால் மருத்துவ பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா செல்வது தள்ளிப்போனது. தற்போது கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்க செல்லவுள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியிருந்த நிலையில், அவருக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் 20ஆம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ரஜினி அமெரிக்க செல்லவுள்ளார். நடிகர் தனுஷும் ஹாலிவுட் படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட யோகி பாபு