திரை பிரபலங்கள் சமீப காலமாக சைக்கிளிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நடிகர் ஆர்யா, தாம் சைக்கிளிங் செய்த பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அஜித்தும் அவ்வப்போது சைக்கிளிங், பைக் ரெய்டு செல்லும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாவதும் அவ்வப்போது நடைபெறும் வழக்கமான செயலாக உள்ளது.
இவர்களை தொடர்ந்து தற்போது நடிகர் ரஹ்மான் சைக்கிளிங்கில் ஆர்வம் காட்டி வருகிறார். ரஹ்மான் பல ஆண்டுகளாக தனது நண்பர்களுடன் சைக்கிளிங் செய்து வருகிறார்.
ஜூலை 25ஆம் தேதி ரஹ்மான் ஆறு நண்பர்களுடன் சென்னை டூபுதுச்சேரி நோக்கி (110 KM) சைக்கிளிங் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அடுத்த முறை 150KM சைக்கிளிங் செய்ய திட்டமிட்டுள்ளதாக ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மான் அணிந்திருக்கும் மாஸ்க்கின் விலை எவ்வளவு தெரியுமா?