சென்னை: அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எடுத்திருக்கும் முடிவு 100 சதவீதம் சரிதான் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டரில், "குருவே நீங்கள் எடுத்திருக்கும் முடிவு 100 சதவீதம் சரிதான். வேறு எதைக் காட்டிலும் எங்களுக்கு உங்களது உடல்நலம் மிகவும் முக்கியம்.
உங்களை நம்பியிருக்கும் மக்கள் மீது அக்கறை வைத்து சுயநலமற்ற முடிவை எடுத்துள்ளீர்கள். நீங்கள் எப்போதும் மற்றவர்களின் நலம் மீதே அக்கறை கொண்டவராக இருப்பதால்தான் பெரிய இடத்தில் உள்ளீர்கள்.
உடல்நலம் பெற வேண்டி ராகவேந்திர சுவாமியை தரிசனம் செய்கிறேன். குருவே சரணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Guruve, The decision you’ve taken is 100% right 🙏@rajinikanth pic.twitter.com/2FwLvELrTF
— Raghava Lawrence (@offl_Lawrence) December 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Guruve, The decision you’ve taken is 100% right 🙏@rajinikanth pic.twitter.com/2FwLvELrTF
— Raghava Lawrence (@offl_Lawrence) December 29, 2020Guruve, The decision you’ve taken is 100% right 🙏@rajinikanth pic.twitter.com/2FwLvELrTF
— Raghava Lawrence (@offl_Lawrence) December 29, 2020
இம் மாத இறுதியில் அரசியல் கட்சி குறித்து அறிவிப்பை வெளியிடுவதாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சியினர் மத்தியிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
கட்சி அறிவிப்புக்கு முன்னர் தான் ஒப்புக்கொண்ட அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிக்க முடிவு செய்த ரஜினி, ஹைதராபாத்தில் நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பில் சுமார் 14 மணிநேரம் வரை இடைவிடாது பணியாற்றினார்.
ஆனால் எதிர்பாராத விதமாக படக்குழுவினர் சிலருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ரஜினிகாந்துக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை எனத் உறுதியானபோதிலும், ரத்த அழுத்தத்தில் கடும் மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்.
தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள அவர், 'கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாகவும், இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி, எனக்கு மட்டும் தான் தெரியும்.
இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் இந்த முடிவை பலரும் வரவேற்றுள்ள நிலையில், அவர் உடல்நலம் பெற வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'என்னை மன்னியுங்கள்' - ரஜினிகாந்த்!