சுஜித்தின் இறப்பு தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கும் இந்த வேளையில், குழந்தையின் பெற்றோருக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நடிகர் ராகவா லாரன்ஸ் சுஜித்தின் பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், 'அக்டோபர் 29இல் பிறந்த நான், இன்று எனது பிறந்தநாளைக் கொண்டாடவில்லை. ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கிவிட்டு சென்றுவிட்டான் சுஜித்' என்று வேதனை தெரிவித்துள்ளார்.
அதோடு, 'சுஜித்தை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும் வேதனைக்குரியது. இந்தத் தருணத்தில் சுஜித்தின் பெற்றோருக்கு சொல்ல விரும்புவது, சுஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகிவிட்டான். அதுபோல் இந்தத் தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை தத்தெடுத்து அந்தப் பிள்ளைக்கு சுஜித் எனப் பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்' என்று லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
#RIPSurjith pic.twitter.com/maXzlsOTyB
— Raghava Lawrence (@offl_Lawrence) October 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#RIPSurjith pic.twitter.com/maXzlsOTyB
— Raghava Lawrence (@offl_Lawrence) October 29, 2019#RIPSurjith pic.twitter.com/maXzlsOTyB
— Raghava Lawrence (@offl_Lawrence) October 29, 2019
மேலும், 'தத்தெடுப்பதால் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாழ்க்கை கொடுத்ததாகவும் இருக்கும், சுஜித்தின் ஆத்மா சாந்தியும் அடையும், சுஜித்தும் தங்களுடனே இருப்பான். அப்படி நீங்கள் தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையை தத்தெடுத்துக் கொடுக்கிறேன். அவன் படிப்புச் செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்' இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
'இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சுச் சாவுகள்' - வைரமுத்து உருக்கம்