தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சேவை செய்ய வேண்டுமா என நண்பர்களும் தனது தாயாரும் தன்னிடம் கேள்வி எழுப்புவதாக தனது முகநூல் பக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், 'தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஒரு சில நாள்களுக்கு முன் திறக்கப்பட்டதை அடுத்து கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதைபார்த்த எனது நண்பர்களும் தாயாரும் சில கேள்விகளை எழுப்பினார்கள். 'நாம் மற்றவர்களுக்கு சேவை செய்ய மிகவும் கடினமாக உழைத்துவருகிறோம். ஆனால் பலர் பொறுப்பில்லாமல் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று குடித்து தங்களுக்கும் பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள். இவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டுமா?' என்று என்னிடம் கேட்கின்றார்கள்.
- — Raghava Lawrence (@offl_Lawrence) May 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Raghava Lawrence (@offl_Lawrence) May 20, 2020
">— Raghava Lawrence (@offl_Lawrence) May 20, 2020
இந்தக் கேள்வியை இவர்கள் மட்டுமல்ல எனக்கு உதவி செய்பவர்கள்கூட சரியான நபர்களுக்குத்தான் நாம் உதவி செய்கிறோமா? நமது சேவையால் உண்மையில் பலன் இருக்கின்றதா? என்று சந்தேகக் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் நமது சேவை நிறுத்தப்பட்டால் மது அருந்துபவரின் குடும்பத்தில் அவரது தாய், மனைவி, குழந்தைகள் கஷ்டப்படுவார்கள். மேலும் சேவையை நிறுத்தினால் குடிபழக்கம் இல்லாத பல ஆண்களின் குடும்பத்தினர்களும் பாதிக்கப்படும். மது அருந்துபவர்களுக்கு எனது சிறிய வேண்டுகோள் என்னவென்றால் குடிப்பதற்கு முன்பாக பசியால் துடித்து அழுதுக்கொண்டிருக்கும் உங்கள் குழந்தைகளை நினைத்துப் பாருங்கள். நேர்மறையானவற்றை பகிர்வோம். சேவைதான் கடவுள்' என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க...ராகவா லாரன்ஸ் வீட்டு முன்பு குவிந்த 20 நபர்கள்; நடந்தது என்ன?