ETV Bharat / sitara

ரஜினியை தொடர்ந்து டிஸ்கவரியில் நுழைந்த பிரகாஷ் ராஜ் - Actor Prakash raj voice over in Wild Karnataka

சில மாதங்களுக்கு முன்னர் டிஸ்கவரி தொலைக்காட்சியில் 'இன் டு தி வைல்ட்' என்னும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அதேபோல் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ், டிஸ்கவரியில் எண்ட்ரி கொடுத்து ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

Actor Prakash raj in Discovery Tamil for Wild Karnataka

author img

By

Published : May 27, 2020, 3:51 PM IST

டிஸ்கவரி தமிழ் சேனலில் சில மாதங்களுக்கு முன்பு ஒளிப்பரப்பான பியர் க்ரில்ஸின் 'இன் டு தி வைல்ட்' நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தற்போது இதே போன்று டிஸ்கவரி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் 'வைல்ட் கர்நாடகா' எனும் நிகழ்ச்சிக்கு வர்ணனையாளராக குரல் கொடுத்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

இதையும் படிங்க... பஸ் கண்டக்டர் டூ நடிகர் - பியர் கிரில்ஸுடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட ரஜினி

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், 'ஓர் அர்த்தமுள்ள பயணம். இயற்கையின் குரலாக மாறப்போகிறேன். இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு மிகவும் சிரமப்பட்டு உருவாக்கப்பட்ட இந்திய வன வாழ்க்கையின் ஆவணப்படம். தமிழ், தெலுங்கில் தொகுத்து வழங்கியதை பெருமையாக உணர்கிறேன்' என தெரிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சி ஜூன் 5ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.