சென்னை: நடிகர் மாதவன் - ஷ்ரதா ஸ்ரீநாத் நடிப்பில் மாறா திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த 8ஆம் தேதி வெளியானது.
கடந்த, 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த சார்லி படத்தின் ரீமேக் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஒருசில ரசிகர்களுக்கு மாறா படம் பிடித்திருந்தாலும், சார்லி படம் பார்த்த ரசிகர்களுக்கு மாறா படம் அவ்வளவு திருப்தியைத் தரவில்லை.
இந்த நிலையில், மாறா படம் குறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், சார்லி படம் பார்த்தவர்களுக்கு மாறா சராசரி படம். இந்த படம் பார்ப்பதற்கு வலி நிறைந்துள்ளதாகவும், மாதவனின் நடிப்பு, கதாபாத்திரத்தைக் கெடுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
![ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட மாதவன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-07-maara-mathavan-script-7205221_12012021182050_1201f_1610455850_15.jpg)
அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள நடிகர் மாதவன், உங்களை ஏமாற்றியதற்கு மன்னிக்கவும். அடுத்த முறை நன்றாக செய்ய முயற்சிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சீமானை சீண்டும் விஜய் சேதுபதி?