'மத யானைக் கூட்டம்', 'கிருமி', 'விக்ரம் வேதா' போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் கதிர். இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜின் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டவர்.
கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகிய 'பிகில்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கதிர், 'ஜடா' என்னும் கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் நடித்தார்.
தற்போது 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'இஷ்க்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கதிர் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனுராஜின் இயக்கத்தில் ஷேன் நிகாம், 'காளிதாஸ்' நாயகி ஆன் ஷீட்டல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'இஷ்க்' படத்தின் தமிழ் ரீமேக்கை 'ஜீரோ' திரைப்படத்தை இயக்கிய ஷிவ் மோஹா இயக்குகிறாராம். 'பெட்ரோமேக்ஸ்' திரைப்படத்தைத் தயாரித்த ஈகிள் ஐ தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கமலின் ஃபேவரிட் நடன அசைவை மேடையில் ஆடிய ஜீவா - ரன்வீர்