'மாநகரம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து 'கைதி' என்னும் புதிய படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை ட்ரீம் வாரீயர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் கார்த்தி ஜோடியாக கதாநாயகிகள் யாரும் இல்லை. இப்படம் முழுவதும் ஒரு நாள் இரவில் சிறையில் இருந்து தப்பிக்கும் கைதியை பற்றிய கதை அம்சத்தை கொண்டுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
-
#kaithi #கைதி #kaithiteaserhttps://t.co/J9PFxvj6st@Dir_Lokesh @itsNarain @SamCSmusic @sathyaDP @DreamWarriorpic
— Actor Karthi (@Karthi_Offl) May 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#kaithi #கைதி #kaithiteaserhttps://t.co/J9PFxvj6st@Dir_Lokesh @itsNarain @SamCSmusic @sathyaDP @DreamWarriorpic
— Actor Karthi (@Karthi_Offl) May 30, 2019#kaithi #கைதி #kaithiteaserhttps://t.co/J9PFxvj6st@Dir_Lokesh @itsNarain @SamCSmusic @sathyaDP @DreamWarriorpic
— Actor Karthi (@Karthi_Offl) May 30, 2019
இந்நிலையில் தற்போது படக்குழு கைதி படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. அதில் சிறையில் இருந்து தப்பித்த கார்த்தியை காவல் துறையினர் ஒரு பக்கம் தேடுவது போலவும் மறுபக்கம் கார்த்தியை ரவுடி கும்பல் கொலை செய்ய துரத்திவருவது போலவும் காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்த டீசர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.