இந்தியாவில் கரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினந்தோறும் கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் பலரும் கரோனாவால் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ஜோக்கர் துளசி ராமன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (மே.10) அவர் உயிரிழந்தார். இவரது மறைவு திறைதுறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் 1976 ஆம் ஆண்டு வெளியான ”உங்களில் ஒருத்தி” படத்தின் மூலம் அறிமுகமானார். இளைஞர் அணி, உடன் பிறப்பு, அவதார புருஷன், திருமதி பழனிச்சாமி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் கோலங்கள், வாணி ராணி, கேளடி கண்மணி போன்ற பல்வேறு தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரைதுறையினர் பலர் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : அவருக்கு திருமணம் முடிந்துவிட்டது; அவ்வளவுதான் - கிரிட்டி சனான்