தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கோமாளி திரைப்படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது.
தற்போது பூமி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் ஜெயம் ரவி புதிய படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜெயம் ரவி தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். அவர் தனது மனைவி, குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை அதில் பகிர்ந்துள்ளார்.
![இன்ஸ்டாகிராமில் ஜெயம் ரவி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9786859_1006_9786859_1607267006353.png)
ஜெயம் ரவி இன்ஸ்டாகிராமில் சேர்ந்த சில மணிநேரங்களிலேயே அவரை 8,000 பேர் பின்தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மஜ்ஜி கௌரம்மா திருவிழா; மாட்டு வண்டி பூட்டி சீர் சுமந்து சென்ற பெண்கள்!