ETV Bharat / sitara

வாழ்வின் எதார்த்தத்தை சொல்லும் 'பேச்சிலர்' - actor gv prakash bachelor

ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் ஜி.வி பிரகாஷ் நடித்திருக்கும் 'பேச்சிலர்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

bachelor
bachelor
author img

By

Published : Feb 15, 2021, 12:26 PM IST

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ் குமார் நடித்துள்ள திரைப்படம் 'பேச்சிலர்'. இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு கூறியதாவது:

"எங்கள் நிறுவனத்தின் சார்பில், தரம் மிகுந்த கதைகளை மட்டுமே தொடர்ந்து தயாரித்து வருகிறோம். வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட படங்களையே இதுவரையிலும் அளித்து வந்திருக்கிறோம். இந்த திரைப்படமும் அந்த வகையில் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும்.

இந்தப்படம் வயது வந்தோர் மட்டுமே, பார்க்கும் தன்மை கொண்ட படமல்ல. இத்திரைப்படம் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பார்க்கும் அழகான கமர்ஷியல் படமாகும்.

'ஓ மை கடவுளே' போன்று இப்படமும் ஒரு அழகான கருத்தை சொல்லும். ஆனால் அதிலிருந்து மாறுபட்டிருக்கும். படத்தை சென்சார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்துவருகிறது. 2021 கோடை காலத்தில் படம் வெளியாகும்" என்று தெரிவித்தார்.

படத்தின் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் கூறுகையில், "கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஒரு இளைஞனின் வாழ்வில், ஒரு பெண் குறிக்கிடும்போது நடக்கும் சம்பவங்களே இந்தப்படம். இளம்பிராயத்து இளைஞன், வளர்ந்த ஆண்மகன் என ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்தில் இரு விதமான தோற்றங்களில் அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

பேச்சிலர் பட காட்சிகள்
பேச்சிலர் பட காட்சிகள்
தேனி ஈஸ்வர் படத்தில் ஒவ்வொரு ஃப்ரேமையும் அழகுடன் செதுக்கியுள்ளார். படத்தின் டீசர் பார்த்துவிட்டு இப்படம் வயது வந்தோருக்கான படமாக தோற்றம் தரலாம். ஆனால் இப்படம் குடும்பத்தில் அனைவரும் இணைந்து பார்க்கும்படியான படமாகும்.

படத்தில் எந்த விதமான சர்ச்சைக்குரிய விஷயங்களும் இல்லை. வாழ்வின் எதார்த்தத்தை அப்படியே அதே அளவில் படம் சொல்லும். அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இருக்கும்" என்றார்.

திவ்யபாரதி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். முனீஷ்காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.