ETV Bharat / sitara

ஜகமே தந்திரம் டீசரில் பெயர் இல்லை - கோபத்தில் உள்ளாரா தனுஷ்? - Jagame Thandhiram producer

ஜகமே தந்திரம் தயாரிப்பாளர் மேல் இருக்கும் கோபத்தால் நடிகர் தனுஷ் தனது படத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

dhanush_
தனுஷ்
author img

By

Published : Feb 23, 2021, 6:28 AM IST

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'ஜகமே தந்திரம்'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

தனுஷ் அதிருப்தி

ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் படம் வெளியிடப்படுவது தனுஷிற்கு பிடிக்கவில்லை என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தநிலையில் தான் ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளரான சசிகாந்த் ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்யப்படும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனால் தயாரிப்பாளர் மீது கோபத்தில் இருக்கும் தனுஷ், ஜகமே தந்திரம் படத்தை புரொமோட் செய்யாமல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.

இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. ஆனால் தனுஷ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து எந்தவொரு பதிவையும் போடவில்லை. மாறாக தான் நடித்துவரும் 'கர்ணன்' படம் குறித்த தகவல்களை மட்டுமே அடிக்கடி ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.

ஜகமே தந்திரம் டீசரில் தனுஷ் பெயர் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. இதுவும் தனுஷிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

இதையும் படிங்க: ஜிவி பிரகாஷ் படத்தின் தலைப்பாக மாறிய டிக் டாக் பிரபலத்தின் பஞ்ச் வார்த்தை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.