கரோனா இரண்டாம் அலையால் சில மாதங்களாகவே திரைப் பிரபலங்கள் பலர் உயிரிழந்துள்ளனர். கே.வி. ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன், பவுன்ராஜ், அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா, நித்திஷ் வீரா உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருவது அனைவரிடமும் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில் அருண்ராஜா மனைவி சிந்துஜா, நடிகர் நித்திஷ் வீரா மறைவுக்கு நடிகர் பால சரவணன் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், "நம்பவே முடியல... என்ன நடக்குதுனே தெரில...நித்திஷ் அண்ணே" என உருக்கமாகப் பதிவிட்டுள்ள அவர், "அன்பு நண்பரே அருண்ராஜா காமராஜ் எத்தனை பெரிய இழப்பு உங்களுக்கு. வார்த்தைகளற்று போனேன். மனம் ஏற்க மறுக்கிறது" என இரங்கல் தெரிவித்துள்ளார்.