எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் 'வலிமை'. அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
வலிமை படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்த அப்டேட்டால் அதகளம்
ஓயாமல் அப்டேட் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு, வலிமை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே இன்பஅதிர்ச்சி கொடுத்திருந்தார் போனிகபூர்.
ஏற்கனவே இத்திரைப்படத்தின் டீசர், முதல் பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வருகின்ற வியாழக்கிழமை (டிச. 2) வலிமையின் அடுத்த அப்டேட்டை வெளியிடவுள்ளது படக்குழு.
அதன்படி வலிமையின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இப்போதே அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ’மாநாடு’ படத்துக்கு வந்த அடுத்த சிக்கல்!