தமிழில் 'மிருகம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆதி. அதன்பின் 'ஈரம்', 'அரவான்', 'ஆடுபுலி', 'அய்யனார்', 'மரகத நாணயம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக தனது பெற்றோரின் வீட்டில் அவர்களுடன் தங்கி பொழுதை கழித்துவருகிறார்.
இதனிடையே ஆதி தனது தந்தைக்கு முகசவரம் செய்துவிடும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
![ஆதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/vlcsnap-2020-06-17-12h59m09s206_1706newsroom_1592378987_1036.png)
![ஆதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/vlcsnap-2020-06-17-12h59m16s785_1706newsroom_1592378987_863.png)
இதையும் படிங்க: வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மனோரமாவின் தோழிக்கு உதவி!