ETV Bharat / sitara

’ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசி பரிசுகளை வெல்லுங்கள்’- நடிகர் ஆரி அர்ஜுனா - speaking competition

சென்னை: பேசு தமிழா பேசு என்ற சர்வதேச பேச்சுப்போட்டியில் மாணவர்கள் கலந்துகொண்டு பரிசை வெல்ல வேண்டும் என நடிகர் ஆரி அர்ஜுனா உற்சாகமூட்டிள்ளார்.

நடிகர் ஆரி அர்ஜூனா
நடிகர் ஆரி அர்ஜூனா
author img

By

Published : Jul 14, 2020, 7:52 PM IST

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், வணக்கம் மலேசியா, ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை ஆகிய சங்கங்கள் இணைந்து நான்காவது சர்வதேச தமிழ் பேச்சுப்போட்டியை நடத்துகின்றன. இந்த பேச்சுப் போட்டிக்கு "பேசு தமிழா பேசு 2020" என தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் உலகெங்கும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று நடிகர் ஆரி அர்ஜுனா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் காணொலி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “பேசு தமிழா பேசு பேச்சுப்போட்டியில் 10 தலைப்புகளில் இரண்டு நிமிடங்கள் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேச வேண்டும். நாம் அனைவரும் தற்போது ஆங்கிலம் கலக்காமல் பேசுவதே இல்லை, இதனை மாற்றும் விதமாகவும், தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகவும் இந்த போட்டி நடைபெறவுள்ளது. அனைத்து மாணவர்களும் இந்த போட்டியில் கலந்து கொண்டு தமிழில் பேசி பரிசினை வெல்ல வேண்டும்” என்றார்.

நடிகர் ஆரி அர்ஜூனா பேசிய காணொலி

இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் https://houstontamilchair.org இணையதள முகவரியை பயன்படுத்திக் கொள்ளவும் என அவர் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: வாட்ஸ் அப் டிஸ்ப்ளே பிக்சரில் சுஷாந்த்- வெளியானது ரியாவின் ரகசியம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.