இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'ஆயிரத்தில் ஒருவன்'.
ரவீந்திரன் தயாரித்த இத்திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.
'ஆயிரத்தில் ஒருவன்' வெளியாகி கிட்டதட்ட 10 ஆண்டுகள் ஆகியும், இப்படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன், 'ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
இது வரை கேட்டிருந்த ,காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு
— selvaraghavan (@selvaraghavan) January 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
இதோ உங்கள் முன்னால் @dhanushkraja #a.o2 pic.twitter.com/4siF01hiJL
">இது வரை கேட்டிருந்த ,காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு
— selvaraghavan (@selvaraghavan) January 1, 2021
இதோ உங்கள் முன்னால் @dhanushkraja #a.o2 pic.twitter.com/4siF01hiJLஇது வரை கேட்டிருந்த ,காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு
— selvaraghavan (@selvaraghavan) January 1, 2021
இதோ உங்கள் முன்னால் @dhanushkraja #a.o2 pic.twitter.com/4siF01hiJL
அதில், “இதுவரை கேட்டிருந்த காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால்” என்று குறிப்பிட்டு நடிகர் தனுஷை டேக் செய்துள்ளார்.
இதன்மூலம் நடிகர் தனுஷ் அப்படத்தில் நடிக்கிறார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 'ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் 2024ஆம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தச் செய்தி தனுஷ், செல்வராகவன் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.