நகைச்சுவை நடிகராக நடித்து வந்த சந்தானம், கதாநாயகனாக மாறிய பிறகு அவரது படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெற்றுத்தரவில்லை. ஆனால், சமீபத்தில் வெளியான ‘தில்லுக்கு துட்டு 2’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, ‘ஏ1’ படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. படத்தில், மொட்டை ராஜேந்திரன், புதுமுக நடிகை தாரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வழக்கம் போல் சந்தானம் படத்தில் இடம்பெறும் பஞ்ச் வசனங்கள் இப்படத்திலும் இடம் பெற்றுள்ளன.
படத்தில் கலக்கலானத் தோற்றத்தில் ’அக்யூஸ்ட் நம்பர் 1’ஆக வலம் வருகிறார் சந்தானம். அது மட்டுமல்லாது வடசென்னை பையனாகவும் நடித்துள்ளார். தாரா, ஐயர் பெண்ணாக நடித்துள்ளார். மேலும், படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஆதி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த சாய்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தை குறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
'சர்வர் சுந்தரம்', 'மன்னவன் வந்தானடி', 'ஓடி ஓடி உழைக்கணும்' ஆகிய படங்கள் சந்தானம் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.