நடிகர் ரஜினிகாந்த் கடந்த 12ஆம் தேதி தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ரஜினி பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கோயில்களில் சிறப்பு வழிபாடு, ஏழை-எளியோருக்கு உணவு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை செய்து ரஜினி மக்கள் மன்றத்தினர், ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்த நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த நெய்யாற்றின்கரையில் சலூன் கடை நடத்திவரும் இசக்கிமுத்து என்பவர் அன்று ஒருநாள் முழுவதும் இலவச சேவை அளித்திருக்கிறார்.
தென்காசியைச் சேர்ந்த முத்து, பல ஆண்டுகளாக கேரளாவில் சலூன் கடை நடத்தி வருகிறார். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சலுகை வழங்கி வரும் இவர், ரஜினி பிறந்தநாளையொட்டி, இலவச கட்டிங், ஷேவிங் செய்யப்படும் என தனது கடைக்கு முன்பு விளம்பரப் பலகை வைத்துள்ளார்.
இதனைக்கண்ட பலரும், முத்துவின் சலூன் கடைக்கு வருகை தந்து கட்டிங், ஷேவிங் மற்றும் மொட்டையடித்தும் சென்றனர்.