பிரபல இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் 2015இல் 'டூரிங் டாக்கீஸ்' என்ற படத்தை இயக்கினார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவந்த அவர், நையப்புடை, கொடி, டிராஃபிக் ராமசாமி, ஆருத்ரா ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.ஏ. சந்திரசேகர் கேப்மாரி (CM) என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடிகைகள் அதுல்யா, வைபவி ஆகியோர் நடித்துள்ளனர். கேப்மாரி திரைப்படம் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் 70ஆவது மற்றும் ஜெய் நடிக்கும் 25ஆவது திரைப்படமாகும்.

இப்படத்தில் நடிகர்கள் சத்யன், லிவிங்ஸ்டன், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சித்தார்த் விபின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரொமாண்டிக் அடல்ட் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்திற்கு தணிக்கைக்குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
