ETV Bharat / sitara

#9YearsOfEnthiran:இவன் பேர் சொன்னதும் கடலும் கடலும் கைத்தட்டும் 'எந்திரன்' நம் மந்திரன் - ஷங்கர்

இரும்பிலே இருதயம் முளைத்த....'எந்திரன்' சிட்டி தந்திரத்தால் தமிழ் சினிமாவை வியக்க வைத்து அடுத்த பரிமாணத்திற்கு கொண்டு சென்று இன்றோடு ஒன்பது வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

enthiran
author img

By

Published : Oct 1, 2019, 7:22 PM IST

இந்தியாவின் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் என்று அழைக்கப்படும் நம்ம தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் சன் பிக்சர்ஸூடன் இணைந்து பிரமாண்டமாக புரோகிராம் செய்த படம் 'எந்திரன்'. விஞ்ஞானி வசீகரன் உருவாக்கும் சிட்டி ரோபோக்கு அவரின் காதலி சனாவுடன் காதல் ஏற்படுகிறது. இயந்திரத்திற்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசங்களை கடந்து சிட்டி எந்த லெவலுக்கு செல்கிறது என்பதே படத்தின் ஒருவரிக் கதை.

சிட்டி
சிட்டிக்கு உயிர் கொடுக்கும் வசீகரன்

சூப்பர் ஸ்டார் ரஜினியே பக்கா மாஸ் ஹீரோ. அதுவும் ஸ்பீட் ஒன் டெரா பைட்ஸ் மெமரி ஒன் ஜெட்டா பைட்ஸ் என்று சிட்டி ரோபோவின் அட்ராசிட்டி என படம் வேற லெவலில் இருந்தது. ஸ்டண்ட், கிராஃபிக்ஸை கச்சித்தமாக கதை முழுவதும் பயன்படுத்தி வியப்பில் ஆழ்த்திருப்பார் ஷங்கர்.

கோயில் திருவிழாவில் ரவுடிகளை மிரட்டும் 'ஆயுத அய்யனார்', மின்சார ரயிலில் ஐஸ்வர்யாவை காப்பற்ற ‘அவெஞ்சர்’ ரேஞ்சுக்கு ரவுடிகளை பந்தாடுவது என படம் முழுக்க சிட்டியின் அட்ராசிட்டியை ரசிகர்கள் கொண்டாடினர்.

Enthiran
ஆயுத அய்யனார்

ஐஸ்வர்யாவின் பிறந்தநாளில் ஆடியன்ஸை அசத்தும் சிட்டியின் லூட்டி. மிலிட்ரி அலுவலர்கள் முன்பு கையெறி குண்டில் ரோஜாவைத்து காதலை வெளிபடுத்துவது அனைத்தும் ரசிகர்களுக்கு கிராஃபிக்ஸ் என்ற உணர்வை தராமல் காட்சியுடன் ஒன்றிணைந்து சென்றிருக்கும். என்ன அழிச்சுராதீங்க டாக்டர்...நான் வாழணும் என்று கை கால் பிய்ந்து தொங்கிய நிலையில் சிட்டி ரோபோ சொல்வது ரஜினி தனது மாஸ் ஃபேஸை கழட்டி வைத்து இந்த படத்திற்கு அவர் எவ்வளவு தூரம் உழைத்துள்ளார் என்பதை காட்டியிருக்கும்.

Enthiran
ரெட் சிப் வில்லன் எந்திரனின் கம்பீர நடை

தாடி விஞ்ஞானி வசீகரன், ஸ்வீட் சிட்டி ரோபோ, மின்னல் கிருதா எந்திர வில்லன் சிட்டி என மூன்று கெட்-அப்களில் மரண மாஸ் காட்டியிருப்பார் ரஜினி. இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதே பாட்டில் சிட்டி பாடிலாங்வேஜ் பக்கா ரோபோ.

Enthiran
சிட்டி தி ரோபோ

எந்திரன் கும்பலில் ஊடுருவிய வசீகரனை கண்டு பிடிக்கும் வில்லன் சிட்டியின் 'ஹூ இஸ் த ப்ளாக் ஷீப்?, சோல்ஜர்ஸ் ரொட்டேட் யூ வர் ஹெட்ஸ்' என்ற வசனங்களுக்கு திரையில் விசில் பறந்தது. அதிலும் வசீகரனை கண்டுபிடிக்கும் போது 'ம்ம்ம்ம்மே' என்று ஆடு கணக்காக ராகம் போடும் போது ரஜினிக்கே உண்டான ஸ்டைல்.

Enthiran
ஆயுதப்பூஜை கொண்டாடும் சிட்டி

ரோபோவுக்கு உயிர் கொடுக்கும் தொழில் நுட்ப வரிகளால் ஆன 'புதிய மனிதா பூமிக்கு வா'... விஞ்ஞானிக்கும் அவரது காதலிக்கும் காதல் ஏற்பட்டால் விஞ்ஞான மொழிகளில் காதல் பாடும் 'காதல் அனுக்கள்'...சிட்டி ரோபோ பண்ணும் அட்ராசிட்டிக்கு 'பூம்...பூம்...ரோபோ', கன்னித்தமிழால் காதலர்களை ஈர்க்கும் 'கிளி மாஞ்சாரோ', இயந்திரத்தின் இதய துடிப்புக்கு காதல் வரிகளை கொடுத்த 'இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதே'...எந்திரன் வில்லனின் கதாபாத்திரத்தை விளக்கும் 'அரிமா...அரிமா...'என பாடல்கள் இந்த படத்திற்கு ஒரு பக்க பலம்... வைரமுத்து, கார்க்கி, பா.விஜய் ஆகியோரின் வரிகளுக்கு எலக்ட்ரானிக் துடிப்பு இசையை வழங்கி சப்போர்ட் செய்திருப்பார் ஆஸ்கார் நாயகன் ஏ. ஆர். ரகுமான்.

Enthiran
ரெட் சிப் வில்லன் சிட்டி

ரோபோவின் பார்வையில் பயணிக்கும் ரத்னவேலுவின் கேமரா ஷாட்டுகளும், அதோடு பின்னிப் பிணையும் கிராஃபிக்ஸ் காட்சிகள், அதிலும் கடைசி காட்சியில் பல நூறு எந்திரன்கள் விதவிதமாக உருவம் மாறுவதை தமிழ் சினிமா ரசிகர்கள் பிரமிப்புடன் பார்த்தனர்.

மனுஷன் படைச்சதுலேயே உருப்படியான ரெண்டே விஷயம் ஒண்ணு நான்...இன்னொண்ணு நீ... இது இயற்கைக்கு மாறானது இல்ல...இயற்கைக்கு புதுசு...எல்லா மனுஷனுக்குள்ளேயும் ரெட் சிப் இருக்கு, அதமட்டும் எடுத்துட்டா எந்தப் பிரச்னையும் இல்லை. போன்ற வசனங்களால் மனிதனின் ஆழ்மன குரூரங்களை விளக்கிய சுஜாதா, மதன் கார்க்கி, ஷங்கர் கம்போவுக்கு பெரும் வரவேற்பு. சிட்டியின் சின்ன நட்டு முதல் சிட்டி உருவாகும் அதிநவீன ஆராய்ச்சி கூடம் வரை சாபு சிரில் தனது பங்கை சிறப்பாக செய்திருப்பார்.

Enthiran
வசீகரன் - எந்திரன்

இறுதியில் வரும் சிட்டியின் உரை தொழில் நுட்பத்துக்கும் சென்டிமென்ட்க்கும் இடையே உள்ள இடைவெளியை அழகாக வெளிப்படுத்தியிருக்கும். இப்படி படம் முழுவதும் ஷங்கர் தனது எண்ணங்களை பிரமாண்டமாக வெளிபடுத்தி தமிழ் சினிமாவில் புது முயற்சியை புகுத்தினார். எந்திரன் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று ஹாலிவுட் சினிமாவை திரும்பி பார்க்கவைத்த நம் மந்திரன்.

Intro:Body:

Nine years of Endhiran movie

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.