ETV Bharat / sitara

#9yrsofNMA: கார்த்தி காஜல் அகர்வாலை கரை சேர்த்த ரொமாண்டிக் திரில்லர்! - கார்த்தி

இயக்குநர் சுசீந்திரனின் முதல் படமான 'வெண்ணிலா கபடி குழு' முற்றிலும் கிராமத்து பின்னணியில் கொடுத்து ஹிட் அடித்தார். தனது இரண்டாவது படத்தை முற்றிலும் நகர பிண்ணியில் 'நான் மகான் அல்ல' என்ற ரஜினி பட டைட்டிலுடன் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்க ஆரம்பித்தார். 'நான் மகான் அல்ல' ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி வழங்கினார்.

NaanMahaanAlla
author img

By

Published : Aug 21, 2019, 5:21 AM IST

Updated : Aug 21, 2019, 7:39 AM IST

வேலையில்லாத இளைஞன் ஜீவா (கார்த்தி), சிநேகிதியின் திருமணத்தில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ப்ரியாவை (காஜல் அகர்வால்) சந்திக்கிறான். கண்டதும் காதல். பாசமுள்ள குடும்பத்தைச் சேர்ந்த கார்த்தியின் தந்தை ஜெயபிரகாஷ், ஒரு கால்டாக்ஸி டிரைவர். நகரில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணை தன் வண்டியில் ஏற்றிச் சென்றதை இவர் நினைவில் வைத்ததால் தொடரும் பிரச்னைகள்.

9 Years of NaanMahaanAlla
ஜீவா தனது குடும்பத்தினருடன்
கொலைகார கும்பல் இவர் மீது காரை ஏற்றி கொ‌ல்ல முயற்சிக்கிறது. அதில் தப்பிப் பிழைக்கும் ‌ஜெயபிரகாஷை கத்தியால் குத்தி சாகடிக்கிறது அந்த கும்பல். தனக்கு தெரிந்த தாதா உதவியுடன் அவர்களைத் தேடும் கார்த்தி, இறுதியில் தனியே அவர்களை பழிவாங்குகிறார்.

மிகவும் இயல்பாக எந்த செயற்கைத்தனமும் இன்றி கார்த்தி, ஜீவாவாக சிறப்பாக நடித்திருப்பார். மயக்கும் புன்முறுவல், நினைத்ததை பேசும் சுபாவம். கார்த்தியின் சிநேகிதி சுதாவாக நீலிமா, தந்தையாக ‌ஜெயபிரகாஷ், தனியார் வங்கி தோழராக சூரி, தாயாக லட்சுமி ராமகிருஷ்ணன் என அனைவரும் தங்கள் பாத்திரங்களை நேர்த்தியாக செய்திருப்பர்.

9 Years of NaanMahaanAlla
ஜீவா - ப்ரியா

இப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் இப்போது தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். பையா படத்திற்கு பின் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்த கார்த்தி, இப்படம் அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றது.

9 Years of NaanMahaanAlla
இயக்குநர் சுசீந்திரன் கடிதம்

நடிகை காஜஸ் அகர்வால் தமிழ் சினிமாவில் தத்தளித்து கொண்டிருந்த நேரத்தில் ‘நான் மகான் அல்ல’ அவரை நிலைநிறுத்தி முன்னணி நடிகர்களான விஜய், அஜித்துடன் ஜோடி சேர வைத்ததும் இப்படத்தின் வெற்றியே. அதேபோல், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதி, இன்று தமிழ் திரையுலகம் கொண்டாடும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உள்ளார். இப்படி ஒரு படம் தான் மட்டும் வெற்றி பெற்றது இல்லாமல் படத்தில் நடித்த அனைத்து கதாநாயகர்களையும் முன்னேற்றியது. நான் மகான் அல்ல திரைப்படம் வெளியாகி இன்றுடன் 9ஆம் வருடத்தை பூர்த்தி செய்துள்ளது. இதை சமூக வலைதளமான ட்விட்டரில் #9 Years of NaanMahaanAlla, #NaanMahaanalla என்ற ஹேஷ்டேக் உடன் கொண்டாடி வருகின்றனர்.

9 Years of NaanMahaanAlla
போஸ்டர்

Intro:Body:

9 Years of #NaanMahaanAlla trending

Conclusion:
Last Updated : Aug 21, 2019, 7:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.