கோவாவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இந்திய பன்னாட்டுத் திரைப்படத் திருவிழா (IFFI) நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்வாண்டு நவம்பர் 20 முதல் 28ஆம் தேதிவரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. படத்தின் கருப்பொருள், தன்மை, சிறப்பம்சங்கள் ஆகிய தன்மைகளை அடிப்படியாகக் கொண்டு திரைப்படங்கள், ஆவணப்படங்களைத் தேர்வுசெய்து திரையிடுவது வழக்கம்.
நாடு முழுவதுமிருந்து இதற்காகப் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள் இடம்பெற்றுப் படத்தைத் தோ்வுசெய்து இந்திய பன்னாட்டுத் திரைப்படத் திருவிழாவில் திரையிடுவர். ஒவ்வொரு ஆண்டும் உயிரிழந்த ஜாம்பவான்கள் நடித்த படங்களை இந்த விழாவில் திரையிடுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டு நடைபெறவுள்ள 52ஆவது இந்திய பன்னாட்டுத் திரைப்படத் திருவிழாவின் உயிரிழந்த நான்கு ஹாலிவுட் நடிகர்களுக்கு, அஞ்சலி செலுத்தும்விதமாக அவர்களின் படங்கள் திரையிடப்படவுள்ளன.
அதன்படி பெர்ட்ராண்ட் டவர்னியர் (Bertrand Tavernier), கிறிஸ்டோபர் பிளம்மர் (Christopher Plummer), ஜீன்-கிளாட் கேரியர் (Jean-Claude Carriere), ஜீன்-பால் பெல்மண்டோ (Jean-Paul Belmondo) ஆகியோரின் திரைப்படங்கள் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்படும். இவர்களின் படங்கள் பன்னாட்டுத் திரைப்படத் திருவிழாவில் அஞ்சலிப் பிரிவில் திரையிடப்படவுள்ளன.
திரையிடப்படவுள்ள நான்கு படங்கள்
பெர்ட்ராண்ட் டவர்னியர் - 1984ஆம் ஆண்டு வெளியான ஏ சண்டே இன் தி கன்ட்ரி (1984) (A Sunday in the Country)
கிறிஸ்டோபர் பிளம்மர் - 2017ஆம் ஆண்டு வெளியான ஆல் தி மணி இன் தி வேர்ல்டு (All the Money in the World by Ridley Scott)
ஜீன்-கிளாட் கேரியர் - 2018ஆம் ஆண்டு வெளியான அட் எடெர்னிட்டி’ஸ் கேட் (At Eternity's Gate)
ஜீன்-பால் பெல்மண்டோ - 1960ஆம் ஆண்டு வெளியான பெர்த்லெஸ் (Breathless)
இதையும் படிங்க: Nayanthara Birthday: லேடி சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய விக்னேஷ் சிவன்