ETV Bharat / sitara

இளையராஜாவுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது இயற்கை.... - music director ilayaraja

அவர் ஒரு திமிர் பிடித்தவர் என்று பலர் கூறுவதுண்டு. அந்தத் திமிருக்கு ஞான செருக்கு, படைப்பாளிக்கான கர்வம் என்று மற்ற பெயர்களும் உண்டு. ஆனால், இந்த வார்த்தைகளை கவனமாக தவிர்த்துவிட்டு, ராஜா திமிராக இருக்கிறார் என்று இன்றும் சொல்பவர்களின் ஆழ் மனதுக்குள் இளையராஜாவின் சாம்ராஜ்ஜியத்தை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு எண்ணம் இருக்கும்.

ராஜா
ராஜா
author img

By

Published : May 15, 2020, 1:29 PM IST

Updated : May 15, 2020, 3:26 PM IST

ஆறலை கள்வர் படைவிட அருளின்

மாறு தலை பெயர்க்கும் மறுவின் பாலை ...

சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் இடம்பெற்றிருக்கும் ’பொருநராற்றுப்படையில்’ மேற்கூறிய வரிகள் வரும். பாலை நிலத்தில் வாழும் கள்வர்கள் அவ்வழியாகச் செல்வோரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றுவிட்டு பொருள்களை எடுத்துக் கொள்வர். அப்பேற்ப்பட்டவர்களும் பாலை ’பண்’ கேட்டுவிட்டு கொலைத் தொழிலை மறந்தனர் என்பது பொருள்.

இதனை ஏன் தற்போது கூற வேண்டிய அவசியம் வந்ததென்றால், எப்பேற்பட்டவர்களையும் மாற்றி வைக்கும் தன்மை இசைக்கு உண்டு. இப்படி இசைக்கும், தமிழர்களுக்கும் சங்க காலத்திலிருந்தே நெருங்கிய தொடர்புண்டு. சங்க காலத்திற்கு பிறகு இசையும் பாடலும் பல்வேறு பரிமாணங்களை பெற்றுள்ளன. திரைப்படம் என்ற ஒரு தளம் வந்த பிறகு அதிலும் இசைக்கு தனி இடம் வழங்கினார்கள் தமிழர்கள்.

மூன்று மணி நேர திரைப்படத்தில் ஒரு ஐந்து நிமிட பாடலுக்கு ஏன் ரசிகர்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள், கொடுக்கிறார்கள். இசை மட்டும்தான் ரசிகனிடம் தன்னை எந்தவித ஒப்பனையுமின்றி ஒப்படைத்துக்கொள்ளும்.

இளையராஜா
இளையராஜா

இசை தன்னை ஒப்படைத்துக்கொள்ள அதை உருவாக்குபவர் ஞானியாக இருத்தலைவிட ஒரு சாமானியனாக இருக்க வேண்டும். இளையராஜா அப்படிப்பட்டவர். ’இளையராஜா’ இந்தப் பெயர் தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை எழுத்துக்குள் அடக்க முடியாது.

ஒரு மனிதன் புற சிக்கலைவிட அக சிக்கலை கையாளும்போதுதான் பெரிதும் தடுமாறுவான். அந்தக் கட்டத்தை லாவகமாக கடப்பது அவ்வளவு எளிதல்ல. அப்படிப்பட்டவனுக்கு இளையராஜா என்றுமே துணை நின்றிருக்கிறார், நிற்கிறார்.

அவர் உருவாக்கிய ஒவ்வொரு இசையும் அந்த ரகம். இரவுகளுக்கானவர் இளையராஜா என்ற கூற்று பல காலம் உண்டு. அப்படி அவரை சுருக்கிவிட முடியாது. இளையராஜா இரவுகளுக்கானவர் மட்டும் இல்லை, 24 மணி நேரத்துக்குமானவர்.

அன்னக்கிளி பாடல் பதிவு
அன்னக்கிளி பாடல் பதிவு

ஒரு இசையை உருவாக்கும்போது தனக்குள் ஆழமாக செல்ல வேண்டும். அப்படி சென்றால், அந்த இசை பல காலங்களை கடந்து நிற்கும். தன்னுள்ளே ஆழ்ந்து செல்லுதல் என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. மிஞ்சிப் போனால் 100 பாடல்களுக்கு அப்படி செல்லலாம்.

ஆனால், இளையராஜா 44 வருடங்களாக ஆழ்ந்து சென்றுகொண்டே இருக்கிறார். இவ்வளவு பெரிய விஷயத்தை அவரிடம் கேட்டால், இறைவன் கொடுக்கிறான் என எளிதாக சொல்லி கடந்து போவார். இந்தப் பக்குவத்திற்கு அவர் அவ்வளவு கொடுத்திருக்கிறார்.

இளையராஜா
இளையராஜா

மக்களுக்கான இசையை அமைப்பது ஒரு பக்குவப்பட்ட சமூகத்தை உருவாக்கும் பணி. வீணையின் நரம்புகளில், சிலரது மேடைகளில் சிக்கிக் கொண்டிருந்த இசைக்கு புது நிறத்தை தந்தவர் இளையராஜா.

இசை சாமானியர்களுக்கானது என்பதை தமிழ் சினிமா பல காலமாக மறந்திருந்தது. அதை எம்.எஸ்.வி வந்து சிறிது சிறிதாக மாற்றிக்கொண்டிருந்தாலும், ஏதோ ஒன்று அவர் முழுமையாக செயல்படுவதை தடுத்தது.

மெல்லிசையும், இசைஞானியும்
மெல்லிசையும், இசைஞானியும்

இளையராஜா வந்து, மச்சான பார்த்திங்களா மல வாழ தோப்புக்குள்ள என்று இசைத்தபோது, தமிழ்நாட்டின் ஏதோ ஒரு கிராமத்தில் வரப்பு வெட்டிக்கொண்டிருந்தவர் அட என்னய்யா இது நம்ம பாட்டு மாதிரி இருக்கு என்று முதல்முறையாக இசைக்காக தனது வாயைத் திறந்தார். வரப்பு வெட்டிக்கொண்டிருந்தவரை முதல் முதலில் வாயை திறக்க வைத்தது இளையராஜாவின் முதல் வெற்றி.

அன்னக்கிளி பாடல் பதிவு
அன்னக்கிளி பாடல் பதிவு

உளவியல் பிரச்னையில் உழன்று கொண்டிருக்கும்போது பலர் இசையை நோக்கிச் செல்வார்கள். அவர்கள் எத்தனை பாடல்கள் கேட்டாலும், அந்த வரிசையை இளையராஜாவிலிருந்தே ஆரம்பிப்பார்கள். இசை மூலம் சாமானியனுக்கு முதல் முதலில் துணை நின்றவர் இளையராஜாதானே. இதில் ஆச்சரியம் என்னவென்றால், ரேடியோவில் ஆரம்பித்து தற்போதைய ஐ பேட் வரை இளையராஜா ஒலித்துக்கொண்டே இருக்கிறார். ஏனெனில், இளையராஜா ஜன கான மகா ராஜா.

ஜன கான மகா ராஜா
ஜன கான மகா ராஜா

ஒரு படைப்பாளன் எக்காலத்தில் தோன்றும் மனிதனுக்கும் கனெக்ட் ஆக வேண்டும். அப்போதுதான் அவன் முழுமையான படைப்பாளி. வரப்பு வெட்டிக்கொண்டிருந்தவரை வாய் திறக்க வைத்தாரென்றால், அமெரிக்க மென்பொருள் நிறுவனத்தில் அமர்ந்திருக்கும் ஒருவரை கிராம வாழ்க்கையை தேட வைத்தார்.

முக்கியமாக, 90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் என்று ரசிகர்கள் பிரிந்துகிடக்கிறார்கள். அவர்கள் மனதுக்கு நெருக்கமான இசையை கொடுப்பவரை தங்களுக்கான இசையமைப்பாளராக ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால், எந்த கிட்ஸாக இருந்தாலும் அனைவரும் இளையராஜாவை ஏற்றுக்கொள்வார்கள். இசை ரசிகர்களை தரம் பிரிப்பது ஒவ்வாத ஒன்றுதான். ஆனால், இளையராஜாவைப் பற்றி பேசும்போது தரம் பிரிப்பது தவிர்க்க இயலாத ஒன்றாக இருக்கிறது. ஏனெனில், அவர் இசையின் தரத்தை மாற்றி வைத்தவர். அது அவருக்கு செய்யும் மரியாதை.

ராஜா
ராஜா

இசை உலகின் வரைபடத்தில் யாரும் கண்டுகொள்ளாத ஒரு ஊரிலிருந்து, பின்னணியிலிருந்து வந்து இன்று தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருப்பதெல்லாம் அசாதாரணமான ஒன்று. பல சமூக தாக்குதல்களை இளையராஜா சந்தித்திருக்கிறார்.

ஆனால் எந்த விஷயமும், அவரை தடுத்து நிறுத்தவில்லை. கிராம பின்னணியிலிருந்து வந்தவருக்கு வேறு உலகத்தில் தன் மீது தொடுக்கப்படும் தாக்குதல் அனைத்தும் புதிதாக இருக்கும். அதனை மிக மிக நேர்த்தியாக எதிர்கொண்டு தன்னை ஸ்தாபித்திருக்கிறார் இளையராஜா.

இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா
இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா

அவர் ஒரு திமிர் பிடித்தவர் என்று பலர் கூறுவதுண்டு. அந்தத் திமிருக்கு ஞான செருக்கு, படைப்பாளிக்கான கர்வம் என்று மற்ற பெயர்களும் உண்டு. ஆனால், இந்த வார்த்தைகளை கவனமாக தவிர்த்துவிட்டு, ராஜா திமிராக இருக்கிறார் என்று இன்றும் சொல்பவர்களின் ஆழ் மனதுக்குள் இளையராஜாவின் சாம்ராஜ்ஜியத்தை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு எண்ணம் இருக்கும். ஏனெனில், இச்சமூகத்தின் கட்டமைப்பு அப்படி.

திமிர் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கும், ஞான செருக்கு, கர்வம் என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. கண்டவரெல்லாம் கர்வமாக இருப்பதில் அழகில்லை கமல் ஹாசன் கர்வமாக இருந்தால்தான் அழகு என்று சிலர் கூற கேட்டதுண்டு. கமல் ஹாசன் கர்வமாக இருந்தால் மட்டும் அழகில்லை இளையராஜா கர்வமாக இருந்தாலும் அழகுதான்.

இளையராஜா
இளையராஜா

இளையராஜாவின் வெற்றியை தனி மனித வெற்றியாய் சுருக்கிவிட முடியாது, கூடாது. அவரது வெற்றி ஒட்டுமொத்த சாமானியர்களின் வெற்றி. ஒரு முழுமையான படைப்பாளி சென்ற பிறகு அவரைக் கொண்டாடும் கெட்ட குணம், தமிழ் கூறும் நல்லுலகுக்கு உண்டு. அப்படிப்பட்ட பாவத்தை மட்டும் இளையராஜாவுக்கு யாரும் செய்துவிடக்கூடாது. அவர் இருக்கும்போதே அவரைக் கொண்டாடி தீர்க்க வேண்டும். இப்போது இளையராஜா அனைவராலும் மதிக்கப்படுகிறார். ஆனால்....?

அவரது இசை, தொப்புள் கொடி அறுத்ததிலிருந்து எட்டுக் காலில் செல்லும்வரை கூடவே பயணப்படுவது. அதனால் அவர் தனது இசைப் பயணத்தை முடித்துக்கொள்வதற்கு முன்னதாகவே அவரை முழுமையாக அனைவரும் கொண்டாடித் தீர்க்க வேண்டும்.

இளையராஜா
இளையராஜா

ஒரு பாடலை உருவாக்குவதென்பதே மிகச்சிரமமான காரியம், அதைவிட சிரமமானது பின்னணி இசை அமைப்பது. 1000 படங்களுக்கும் மேல் பின்னணி இசை அமைத்து அதனை பல வருடங்களாக ரசிக்க வைப்பதெல்லாம் யாராலும் முடியாதது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு பின்னணி இசை அமைக்க அந்தச் சூழலில், இருந்த இடத்திலிருந்தே வாழ வேண்டும். அப்படிப் பார்த்தால் இளையராஜாவின் உழைப்பு எவ்வளவு பெரியது. அதைத் தாண்டி அவருக்கு எவ்வளவு அழுத்தங்கள் இருந்திருக்கும்.

44 வருடங்கள், 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசை, சிம்பொனி என அவர் உழைத்து உழைத்து தன்னை உருக்கி இசையை உருவாக்கி வாழ்ந்துகொண்டிருக்கிறார். சில பவுண்ட்ஸ் மூளைக்குள் இவ்வளவு இசை நோட்ஸ்கள் உருவாகியதெல்லாம் வரலாறு வாய் பிளக்கும் நிகழ்வு.

ராஜா
ராஜா

மிருகத்திலிருந்து மனிதன் உருவானான். எனவே இயல்பாகவே அவனுக்குள் ஒரு மிருக குணம் இருப்பது இயற்கையின் நியதி. அந்த குணத்தை யாராலும் மாற்ற முடியாது. ஆனால், கொஞ்சம் மட்டுப்படுத்தி வைக்கலாம். மனிதனின் மிருக குணத்தை மட்டுப்படுத்த யாராலும் முடியாதா என்று இயற்கை திகைத்தபோது ராஜா வந்து அதனை செய்து முடித்தார்.

இளையராஜா
இளையராஜா

கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியது போல் கொலை தொழில் செய்தவர்களையும் இசை மாற்றியது. அப்படித்தான் மிருக்கத்திலிருந்து உருவான மனிதனுக்கு மனித உணர்வைத் தந்தது அவரது இசை.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மிருகத்திலிருந்து வந்த மனிதனை மீண்டும் மிருக நிலைக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியவர் இளையராஜா. அவருக்கு இந்த இயற்கையும், மனித சமூகமும் மிகப்பெரிய நன்றிக்கடன்பட்டிருக்கிறது. நன்றி இளையராஜா....

இதையும் படிங்க: யுவன் - தற்கால இசையின் ‘இளைய’ ராஜா #23YearsOfYuvanism

Last Updated : May 15, 2020, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.