ETV Bharat / sitara

தேசியத் தலைவருக்காக மொட்டை அடித்த 1000 பேர்!

தேசியத் தலைவர் படத்துக்காக ஒரே பெயருடைய ஆயிரம் துணை நடிகர்கள் மொட்டை அடித்துக் கொண்டனர்.

தேசியத் தலைவர்
தேசியத் தலைவர்
author img

By

Published : Aug 17, 2021, 1:53 PM IST

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு ’தேசியத் தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டு வருகிறது. ’டிரெண்ட் சினிமாஸ்’ மற்றும் ’எம்டி சினிமாஸ்’ இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இதில் முத்துராமலிங்க தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் என்பவர் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். ’ஊமை விழிகள்’ படத்தை இயக்கிய அரவிந்தராஜ் இப்படத்தை இயக்குகிறார்.

தேசியத் தலைவர்
தேசியத் தலைவர்

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முன்னதாக நடைபெற்றது. பாரதிராஜா, ராதாரவி ஆகியோர் நடித்த காட்சிகள் முன்னதாக படமாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து முக்கியக் காட்சிகள் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் நடைபெற உள்ளன.

இந்நிலையில், கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு இப்படத்தில் நடிக்க முத்துராமலிங்கம் என்ற பெயர் கொண்ட ஆயிரம் நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேசியத் தலைவர்
தேசியத் தலைவர் திரைப்பட நடிகர்

அதன்படி தற்போது இப்படத்தில் நடிக்க முத்துராமலிங்கம் என்ற பெயர் கொண்ட ஆயிரம் நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் மொட்டை அடித்து முன்னதாக இப்படத்தில் நடித்தனர்.

கரோனா விதிமுறைகளைக் கடைபிடித்து தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’பிளாக் பண்ணத்தான் செய்வேன்...’ இயக்குநர் சேரன் ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.