மும்பை: மீ டூ இயக்கத்துக்குப் பிறகு பெண்களிடம் நடந்து கொள்ளும் விதத்திலிருந்து ஆண்களிடம் பல்வேறு மாறுதல் ஏற்பட்டிருப்பதாக நடிகை கஜோல் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நடிகை கஜோல் கூறியதாவது:
திரைத்துறை மட்டுமில்லாமல் பிற வேலைகளுக்கும் செல்லும் பெண்களிடம் அணுகும்முறையில் ஆண்களை பல்வேறு மாற்றங்களை கையாளத் தொடங்கியுள்ளனர். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் பல பிரபலங்களின் வாழ்கையை மீ டூ இயக்கம் சிக்கலில் சிக்க வைத்தது என்பதை எந்த ஆண்களும் மறுக்கமாட்டார்கள். இது தேவயான மாற்றம் மட்டுமில்லாமல், அதை தெள்ளத்தெளிவாகவும் காண முடிகிறது.
முன்யோசனையுடன், பாதுகாப்பாகவும் பெண்களிடம் ஆண்கள் நடந்துகொள்கிறார்கள். அலுவலகச் சூழலானாலும் சரி, திரைப்பட படப்பிடிப்புத் தளமானாலும் சரி உரையாடும்போது கவனமாக இருக்கிறார்கள் என்று கூறினார்.
கஜோலின் கருத்தை ஆமோதித்து கருத்து தெரிவித்த நடிகை ஸ்ருதிஹாசன், விமான பயணத்தின்போது சக பயணி ஒருவர் பெண்கள் உடல் அருகே நமக்கு இருக்கும் இடைவெளியை நடந்து கொள்ளும் விதம் குறித்து படிப்பதைக் கண்டேன். அந்த வகையில் கஜோல் கூறியது போல் கேள்வி கேட்பவர்களிடம் உரிய பதிலை அளிக்க வேண்டும்.
இதுதான் சிறந்த மனிதரின் நடத்தையாக பார்க்கப்படுகிறது. நமது நாட்டில் இந்த விவகாரம் இவ்வளவு பெரிய அளவில் பேசப்பட்டதற்கு, தங்களுக்கு நிகழ்ந்த அனுபவத்தை தைரியமாக வெளியே வந்து பேசியவர்களால்தான் என்பதை நினைத்து பெருமை கொள்வதாகத் தெரிவித்தார். 'தேவி' குறும்படத்தின் திரையிடல் நிகழ்வின்போது, நடிகை கஜோல், ஸ்ருதிஹாசன் ஆகியோர் இவ்வாறு பேசியுள்ளனர்.
ஹாலிவுட் திரையுலகில் தொடங்கிய மீ டூ இயக்கம், 2018 ஆம் ஆண்டு இந்தியாவிலும் பிரபலமானது. இதன் காரணமாக திரையில் காமெடியானாக, நடிகராக ஜொளித்த பல பிரபலங்களின் முகத்திரைகள் பலரால் கிழக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: சென்சாரில் கட் - ரிலீஸுக்கு முன்பே வெளியிட்ட 'ஜிப்ஸி' படக்காட்சி