ஹைதராபாத்: இன்று ராணி போல் வாழும் நடிகை கரீனா கபூர், அவரது அக்கா கரிஷ்மா கபூரின் கடந்த கால வாழ்க்கை துயரம் நிறைந்தது. இவர்களின் தாயார் பபிதா கபூர் இவர்களை தனி ஆளாக வளர்த்தெடுத்தார். தற்போது பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான கரினா கபூர் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து கரீனா, பிறர் நினைப்பது எங்கள் கபூர் குடும்பம் கடந்த காலத்தில் செல்வ செழிப்பாக வாழவில்லை. எனக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர என் தாயும் அக்காவும் போராடினார்கள். அதிலும் என் தாய் தனி ஆளாக குடும்பத்தை காத்து நின்றார்.
என் அக்கா கல்லூரிக்கு லோக்கல் ரயிலில்தான் செல்வார், நான் அதிலிருந்து தப்பிவிட்டேன்; ஏனென்றால் நான் கல்லூரிக்கே போகவில்லை. பள்ளி செல்லும் காலங்களில் பேருந்தில் சென்று வந்தேன். எங்களிடம் ஒரு கார் இருந்தது. ஆனால், டிரைவருக்கு கொடுக்க பணமில்லை. இப்படியான கஷ்டத்தில் எங்கள் அம்மா எங்களை வளர்த்ததால்தான் நாங்கள் இன்று நல்ல நிலையில் இருக்கிறோம். நாங்கள் சந்தித்த துயரமான நாட்கள் எங்களை உறுதியானவர்களாக மாற்றியது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஷூட்டிங்கிற்கு பறந்த ரன்பீர் - ஷ்ரதா