ETV Bharat / sitara

ரசிகர்களுக்கு ஹாரி பாட்டரை படித்துக் காட்டிய 'ஸ்மைலி குயின்' - புத்தகம் வாசிக்கும் ஆலியா பட்

ஜே.கே.ரவுலிங்கின் புகழ் பெற்ற தொடரான ​​ஹாரி பார்ட்டரின் எட்டாம் அத்தியாயத்தை படிக்கும் வீடியோவை நடிகை ஆலியா பட் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Alia
Alia
author img

By

Published : May 29, 2020, 12:55 PM IST

தேசிய ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பாலிவுட்டின் ஸ்மைலி குயின் ஆலியா பட் அவ்வப்போது தனது அன்றாட செயல்களை வீடியோக்களாகவும் புகைப்படங்களாகவும் சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார்.

உலக புத்தக தினத்தை முன்னிட்டு உலக அளவில் பெரும் ரசிகர்களை கொண்ட ஜே.கே.ரவுலிங்கின் எழுதிய ஹாரி பாட்டர் புத்தகத்தை தனது புதிய நண்பர் என குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை ஆலியா வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து தற்போது, ஹாரி பாட்டரின் எட்டாம் அத்தியாத்தை ரசிகர்களுக்கு படித்து காட்டுவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹாரி, ஹாக்வார்ட்ஸ், மாய உலகம் என எனது மனதிற்குள் நுழைந்தது. நான் இளைமை காலம் முதல் புத்தகங்களுடன் அதிகம் நட்பு பாராட்டியது இல்லை.

ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த மேஜிக் நடந்தது. நான் என் வீட்டில் இப்போது ஹாரி பாட்டரின் புத்தகங்களை வாங்கி வைத்து படித்துக்கொண்டிருக்கிறேன். மேஜிக் நம்மை சுற்றியே இருக்கிறது, நாம் அதை உணர வேண்டும் அல்லது அதைப் படிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'மகளே ஆலியா பட் இந்தாண்டு உனக்கு வெற்றிகரமாக அமையட்டும்' - சோனி ரஸ்தான்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.