மும்பை: புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.
திருமணத்துக்கு பின்பும் தனக்கான மார்கெட்டை இழக்காமல் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் பாலிவுட் நடிகை வித்யா பாலன். இதையடுத்து தனது புதிய படம் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
அதில், 'ஷெர்னி' என்ற தலைப்பில் உருவாகும் எனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் மிகழ்ச்சி. படத்தின் ஷூட்டிங்கை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
படத்தை அமித் மசூர்கர் இயக்குகிறார். ஆஷ்தா டிகு திரைக்கதை எழுகிறார். பூஷன்குமார், கிரிஷன்குமார், அமித் மசூர்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மனித கணினி என்று அழைக்கப்படும் எழுத்தாளர் சகுந்தலா தேவி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் 'சகுந்தலா தேவி' படத்தில் தற்போது நடிக்கிறார் வித்யா பாலன்.
இந்தப் படத்தில் சன்யா மல்கோத்ரா, ஜிஷ்ஷு சென்குப்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
18 வயது மாணவர்களுக்கு ஐந்து வயதே நிரம்பிய சகுந்தலா தேவி, கணக்கு பாடத்தில் எழுந்த சிக்கலை தீர்த்தபோது அவரது மூளையில் அப்படியொரு தனித்துவம் இருப்பது கண்டறியப்பட்டது.
அந்த வகையில் கணக்குகளை விரல் நினியில் துல்லியமாக செய்த சகுந்தலா தேவியின் திறன் பற்றி இந்தப் படத்தில் சொல்லப்படவுள்ளது.
இந்தப் படத்தை அனு மேனன் இயக்குகிறார். படம் வரும் மே மாதம் 8ஆம் தேதி திரைக்கு வருகிறது