ஹைதராபாத்: மிஸ்டர் லெலி திரைப்படத்தில் வருண் தவானுக்கு பதில் விக்கி கௌசல் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருண் தவான், கரண் ஜோகர், சஷாங் கைடன் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகவிருந்த படம் ‘மிஸ்டர் லெலி’. கரண் ஜோகர் இதற்கு முன்பு ஹம்டி ஷர்மா கி துல்கனியா, பத்ரிநாத் கி துல்கனியா ஆகிய படங்களை வருண் - சஷாங் கூட்டணியை வைத்து தயாரித்திருந்தார்.
2020 ஜனவரி மாதம் வருண் ஸ்டில்லுடன் ’மிஸ்டர் லெலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதன் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே படம் வேறு நாயகனுக்கு கைமாறியுள்ளது.
விக்கி கௌசலை கதாநாயகனாக வைத்து படத்தை இயக்க இயக்குநர் சஷாங் விரும்புகிறார். இதன் காரணமாக மொத்த ஸ்கிரிப்டையும் மாற்றி எழுதியதாக கூறப்படுகிறது. கதையைக் கேட்டு பிடித்துப்போன விக்கி, மார்ச் மாதம் முதல் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.