2015ஆம் ஆண்டு வெளியான ‘தில்வாலே’ படத்தின் மூலம் ஒன்றிணைந்த வருண் தவான் - க்ரிட்டி சனோன் ஜோடி தற்போது அமர் கௌசிக் இயக்கத்தில் உருவாகும் ‘பேடியா’ படத்தின் மூலம் மீண்டும் ஒன்றிணையவுள்ளது.
இந்த படத்தை 2021 ஜனவரி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. முதலில் ஷ்ரதா கபூர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது க்ரிட்டி சனோன் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் தினேஷ் விஜயனுடன் க்ரிட்டிக்கு நல்ல நட்பு இருப்பதே இந்த வாய்ப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.
இதுபோக வருண் தவான் நடிப்பில் உருவான ‘கூலி நம்பர். 1’ விரைவில் திரைக்கு வரவுள்ளது. க்ரிட்டி சனோன், லக்ஷ்மன் உத்தேகரின் ‘மிமி’ படத்தின் வெளியீடுக்காக காத்திருக்கிறார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">