பாலிவுட்டில் தற்போது எதிர்பார்ப்பில் இருக்கும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் 'பெல் பாட்டம்'. அக்ஷய் குமார் நடிக்கும் இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை வாணி கபூர் நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து வாணி கபூர் கூறுகையில், "நான் அக்ஷய் சாருடன் நடிக்க இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். படம் தொடங்கும் ஆரம்ப நிலையிலேயே என்னை வீட்டில் இருப்பதைபோல் உணரவைத்த படக்குழுவில் ஒரு அங்கமாய் இருப்பதை நினைத்து ஆர்வமாய் இருக்கிறேன். இந்த உற்சாகம் படத்தில் அழகாய் கொண்டுசேர்க்கப்படும் என்று நம்புகிறேன்" என்றார்.
1980களில் நடக்கும் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உண்மைச் சம்பவங்களை வைத்து இந்தத் திரைப்படம் உருவாகிவருகிறது. ரஞ்சித் எம். தேவாரி இயக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடப்பாண்டு இறுதியில் நடக்கும் என்று கூறப்படுகிறது.
முன்பே அறிவித்தபடி 'பெல் பாட்டம்' படப்பிடிப்புக்கு அக்ஷய் குமாரும் படக்குழுவும் தயாராகிவருகின்றனர். 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கும் நிலையில் படப்பிடிப்புக்காக அக்ஷய் குமார் லண்டன் செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டுகிறது.
இதையும் படிங்க... 'எதையும் பிளான் பண்ணி பண்ணணும்'- படப்பிடிப்புக்குத் தயாராகும் அக்ஷய் குமாரின் 'பெல் பாட்டம்'