டெல்லி: மிர்சாபூரைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் அமேசான் ப்ரைமுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த மனுவில், மிர்சாபூருக்கு என சிறந்த கலாசார மதிப்பு உள்ளது. ஆனால், எக்சல் எண்டர்டெயின்மெண்ட் 2018ஆம் ஆண்டு வெளியிட்ட மிர்சாபூர் வெப் சீரிஸ் எங்கள் மாவட்டத்தை தவறாக சித்தரிக்கிறது. அதில் இது அடியாட்கள் நிறைந்த மாவட்டம் போல் காட்டப்படுகிறது என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எக்சல் எண்டர்டெயின்மெண்ட் , அமேசான் ப்ரைம் இது தொடர்பாக விளக்கமளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மிர்சாபூர் வெப் சீரிஸில் ஒரு பெண் பணியாளுடனும், மாமனாருடனும் உறவு கொள்வது போன்ற காட்சி மிர்சாபூர் மக்களை மிகவும் தவறாக சித்தரிக்கிறது எனவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.