ETV Bharat / sitara

அண்ணன் - தம்பி பாசப்பிணைப்பை கூறும் 'பாகி 3' - டைகர் ஷெராஃப் நடிப்பில் பாகி 3

அண்ணன் - தம்பிக்கு இடையேயான பாசப்பிணைப்பை எடுத்துக் கூறும் கதையம்சத்தில் அமைந்திருக்கும் 'பாகி 3' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களால் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

Baaghi 3 trailer
Tiger Shroff starrer Baaghi 3
author img

By

Published : Feb 6, 2020, 5:10 PM IST

மும்பை: வேட்டை படத்தின் ரீமேக்காக டைகர் ஷெராஃப் நடிப்பில் ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் 'பாகி 3' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

தமிழில் மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலாபால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'வேட்டை' படத்தின் ரீமேக்தான் 'பாகி 3'

இந்தப் படத்தில் டைகர் ஷெராஃப் ரோனி என்ற கேரக்டரிலும், ரித்தேஷ் தேஷ்முக் விக்ரம் என்ற கேரக்டரிலும் சகோதரர்களாக நடித்துள்ளனர். ரித்தேஷ் போலீஸாக தோன்றியுள்ளார். ரோனி - விக்ரம் ஆகிய சகோதரர்களுக்கு இடையேயான பாசப் பிணைப்பை வெளிப்படுத்துபோல் படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது.

சிரியா நாட்டுக்குச் சென்ற விக்ரம் கடத்தல்காரர்கள் பிடியில் சிக்க, ஒற்றை ஆளாக தனது சகோதரரை ரோனி எப்படி மீட்கிறார் என்பதை அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் பாகி 3 படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

'பாகி' பட வரிசையில் மூன்றாவது பாகமாக வெளிவரவிருக்கும் பாகி 3 படத்தில் ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். அங்கிதா லோஹான்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் டைகர் ஷெராஃப்பின் தந்தையும், பாலிவுட் மூத்த நடிகருமான ஜாக்கி ஷெராஃப் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதுபோன்றதொரு காட்சி எதுவும் ட்ரெய்லரில் இடம்பெறவில்லை.

இதையடுத்து 'பாகி 3' படம் குறித்து அதன் தயாரிப்பாளர் ஷாஜித் நடிவாலா கூறியதாவது:

ஹீரோ படத்தில் டைகர் ஷெராஃப்பை நாங்கள் அறிமுகப்படுத்தியதிலிருந்து அவரும், ஜாக்கி ஷெராஃப்பும் இணைந்து நடிப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக அவர்கள் இருவரையும் ஒன்றாக நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்கிறோம். ஆனால் அவர்கள் இணைந்து தோன்றுவதற்கு ஏற்றார்போல் படம் அமைந்தால்தான் நடிப்பது என இருவரும் ஆணித்தரமாக உள்ளனர் என்றார்.

அகமத் கான் இயக்கத்தில் உருவாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகி 3 மார்ச் 6ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sitara/cinema/tiger-shroff-starrer-baaghi-3-trailer-out/na20200206123746276

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.