தமிழில் மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலாபால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'வேட்டை' படத்தின் ரீமேக்தான் 'பாகி 3'
இந்தப் படத்தில் டைகர் ஷெராஃப் ரோனி என்ற கேரக்டரிலும், ரித்தேஷ் தேஷ்முக் விக்ரம் என்ற கேரக்டரிலும் சகோதரர்களாக நடித்துள்ளனர். ரித்தேஷ் போலீஸாக தோன்றியுள்ளார். ரோனி - விக்ரம் ஆகிய சகோதரர்களுக்கு இடையேயான பாசப் பிணைப்பை வெளிப்படுத்துவதுபோல் படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது.
சிரியா நாட்டுக்குச் சென்ற விக்ரம் கடத்தல்காரர்கள் பிடியில் சிக்க, ஒற்றை ஆளாக தனது சகோதரரை ரோனி எப்படி மீட்கிறார் என்பதை அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் 'பாகி 3' படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
-
(1/2)Jab Ronnie aur Siya ke moves par honge sab vaari, tab bajega dhol aur naachegi duniya saari. #Bhankas Song Out Now! https://t.co/PABkvFUbvp#Baaghi3 #SajidNadiadwala @ShraddhaKapoor @Riteishd @anky1912 @khan_ahmedasas @WardaNadiadwala @TSeries @thebappilahiri @tanishkbagchi
— Tiger Shroff (@iTIGERSHROFF) February 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">(1/2)Jab Ronnie aur Siya ke moves par honge sab vaari, tab bajega dhol aur naachegi duniya saari. #Bhankas Song Out Now! https://t.co/PABkvFUbvp#Baaghi3 #SajidNadiadwala @ShraddhaKapoor @Riteishd @anky1912 @khan_ahmedasas @WardaNadiadwala @TSeries @thebappilahiri @tanishkbagchi
— Tiger Shroff (@iTIGERSHROFF) February 19, 2020(1/2)Jab Ronnie aur Siya ke moves par honge sab vaari, tab bajega dhol aur naachegi duniya saari. #Bhankas Song Out Now! https://t.co/PABkvFUbvp#Baaghi3 #SajidNadiadwala @ShraddhaKapoor @Riteishd @anky1912 @khan_ahmedasas @WardaNadiadwala @TSeries @thebappilahiri @tanishkbagchi
— Tiger Shroff (@iTIGERSHROFF) February 19, 2020
'பாகி' பட வரிசையில் மூன்றாவது பாகமாக வெளிவரவிருக்கும் 'பாகி 3' படத்தில் ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். அங்கிதா லோஹான்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் டைகர் ஷெராஃப்பின் தந்தையும், பாலிவுட் மூத்த நடிகருமான ஜாக்கி ஷெராஃப் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுபோன்றதொரு காட்சி எதுவும் ட்ரெய்லரில் இடம்பெறவில்லை. அகமத் கான் இயக்கத்தில் உருவாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'பாகி 3' மார்ச் 6ஆம் தேதி திரைக்கு வருகிறது.
தற்போது இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. நண்பரின் திருமண நிகழ்ச்சியின்போது டைகர் ஷெராஃப்பும், ஷ்ரத்தா கபூரும் நடனம் ஆடுகின்றன. 'ஏக் ஆங் மரு' என்று தொடங்கும் பாடல் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி உள்ளது. இப்பாடல் 1984ஆம் ஆண்டு ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான 'தோஹ்ஃபா' படத்தில் வந்த 'ஏக் ஆங் மரு' என்னும் பாடலின் ரீமேக் ஆகும்.