பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். அவரின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகிறது.
பாலிவுட் திரையுலகில் அவர் சந்தித்த இன்னல்கள், அவலங்கள் பல. அது தொடர்பான காணொலிகளை சுஷாந்தின் ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர்.
சுஷாந்த் தற்கொலை தொடர்பாக சக நடிகர்கள் சிலர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுஷாந்தின் வெளிவராத கடைசி படமான 'தில் பெச்சாரா' படத்தின் நாயகி சஞ்சனா சங்கி, சுஷாந்த் இறப்பு குறித்து உணர்வுப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க... 'ரசிகர்களின் அண்ணன், மக்களின் கலைஞன், தன்னைத்தானே செதுக்கிய தமிழ் சினிமாவின் தளபதி'