சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான திரைப்படம் 'காலா'. இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் நானா படேகர்.
இவர் மீது கடந்த ஆண்டு அக்டோபரில், நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா என்ற நடிகை 'மீடூ' புகார் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் 2008ஆம் ஆண்டு வெளியான 'ஹார்ன் ஓகே பிளிஸ்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தன்னிடம் அத்துமீறிச் செயல்பட்டதாக புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தின் போது படப்பிடிப்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிவில் நானா படேகர் மீதான குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணையில் மேல்முறையீடு செய்ய தனுஸ்ரீ தத்தாவுக்கு நீதிமன்றம் காலம் வழங்கி வழக்கைச் செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.