மும்பை: லூப் லபேடா படத்தில் எனக்கும் டாப்ஸிக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று பாலிவுட் நடிகர் தாஹிர் ராஜ் பாசின் கூறியுள்ளார்.
லூப் லபேடா படத்தின் படப்பிடிப்பை எதிர்நோக்கி உள்ளேன். இந்தக் கதையுடன் லாக்டவுன் சமயத்தில் வாழ்ந்துள்ளேன். தற்போது கதையானது புதிய வடிவம் பெற்றுள்ளது.
எனவே சவால் மற்றும் வேடிக்கை நிறைந்ததாக படப்பிடிப்பு இருக்கும் என நம்புகிறேன். நான் இதுவரை பார்த்திடாத விஷயங்கள் படத்தில் இருப்பதால்தான் இரட்டிப்பு ஆர்வத்துடன் உள்ளேன்.
படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் டான்ஸர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில், நன்றாக நடனமாடும் டாப்ஸிக்கும், எனக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்.
அழகு மட்டுமில்லாமல் அற்புதமான நடிப்பையும் வெளிப்படுத்தும் நடிகையாக டாப்லி திகழ்கிறார்.
இவ்வாறு நடிகர் தாஹிர் ராஜ் பாசின் கூறியுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் இளம் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் தாஹிர் ராஜ் பாசின், இந்திய கிரிக்கெட் அணி 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்றதை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள ‘83’ படத்தில் சுனில் கவாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
1998ல் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான ரன் லோலா ரன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆக லூப் லபேடா உருவாகவுள்ளது. படத்தை ஆகாஷ் பாட்டியா இயக்குகிறார். லாக்டவுனுக்குப் பிறகு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது