பிரகாஷி தோமர், சந்திரோ தோமர் என்னும் வயதான துப்பாக்கிச் சுடும் வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ‘சாண்ட் கி ஆங்’ (Saand Ki Aankh). பிரகாஷி தோமர்-சந்திரோ தோமர் இருவரும் மிகத் துல்லியமாக குறிப்பார்த்து சுடும் திறமையுடையவர்கள்.
சந்திரோ தோமர் (chandro tomar)
உலகின் வயதான துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர் சந்திரோ தோமர். ஆண்கள் அதிகமாகப் பயிற்சிபெறும் ஜொஹ்ரி கிளப் அகாதெமியில் சந்திராவின் பேத்தி துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி எடுக்க விரும்பினார். தனியாகச் செல்ல கூச்சப்பட்ட பேத்திக்கு உறுதுணையாக அவரும் சென்றிருக்கிறார்.
அங்கு பேத்தி துப்பாக்கிச் சுட தயங்குவதைப் பார்த்த சந்திரோ, உடனடியாக துப்பாக்கியை எடுத்து இலக்கை துல்லியமாகச் சுட்டுள்ளார். இதைக்கண்ட பயிற்சியாளர் ஃபரூக் பதான், தன்னுடைய அகாதெமியில் சேரும்படி அறிவுரை வழங்கியுள்ளார். அதனையேற்று அகாதெமியில் பயிற்சிபெற்ற சந்திரோ, எண்ணற்ற பதக்கங்களை வென்றுள்ளார்.
சந்திரோ தோமர் ஒரு போட்டியில் டெல்லியின் முன்னாள் டிஐஜி தீரஜ் சிங்கை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் அவரிடம் தீரஜ் சிங் தோற்றுப்போனார். சந்திரோவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள தீரஜை அழைத்ததற்கு, ஒரு பெண்ணிடம் அவமானப்பட்டுவிட்டேன், புகைப்படம் எடுக்க முடியாது என மறுத்துள்ளார்.
சந்திரோ தோமர் தன்னுடைய கொழுந்தியாள் பிரகாஷி தோமர் துப்பாக்கிச் சுடுதலில் சேர்வதற்கு உத்வேகமாக இருந்தார்.
பிரகாஷி தோமர் (prakashi tomar)
பிரகாஷி தோமரின் மகள் சீமா தோமர், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்துகொள்வதற்காக ஜொஹ்ரி கிளப் என்னும் அகாதெமியில் சேர நினைத்தார். ஆனால் தனியாக செல்ல தயங்கியதால் தனது தாய் பிரகாஷி தோமரை உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சீமாவுக்கு எப்படி துப்பாக்கிச் சுடுவது என அவர் சுட்டுக்காட்டியதைப் பார்த்து பயிற்சியாளர் ஃபரூக் பதான் மிரண்டு போயிருக்கிறார். மிகத் துல்லியமாக பிரகாஷி சுட்டதைப் பார்த்து அவரையும் தன்னுடைய அகாதெமியில் இணையும்படி அறிவுரை வழங்கியிருக்கிறார்.
அவரது அறிவுரையை ஏற்று துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் ஈடுபட்ட பிரகாஷி தோமர், பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் வாகை சூடினார்.
Saand Ki Aankh
துப்பாக்கி ஒன்றும் காமெடியான விஷயம் கிடையாது. அது ஆண்களுக்கானது, அவர்கள் கையில் இருப்பதே பொருத்தமாக இருக்கும் என ‘சாண்ட் கி ஆங்’ டிரெய்லர் தொடங்குகிறது.
பூமி பட்னேகர், டாப்சி இருவரும் துல்லியமாகச் சுடுவதை பார்த்து என்ன உணவு சாப்பிடுகிறீர்கள் என பயிற்சியாளர் கேள்வி கேட்கிறார், "அவமானங்கள்" என டாப்சி கூற இதன் டிரெய்லர் நகர்கிறது. சந்திரோ தோமராக பூமி பெட்னேகரும் பிரகாஷி தோமராக டாப்சியும் நடித்துள்ள இப்படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து அனுராக் கஷ்யப் தயாரித்துள்ளார்.
துஷர் ஹிராநந்தனி இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜக்தீப் சித்து வசனம் எழுதியுள்ளார். அக்டோபர் 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தப் படத்துக்காக டாப்சியும் பூமி பட்னேகரும் ‘ஷூட்டிங் பாட்டிகளை’ சந்தித்து பயிற்சி பெற்றனர். பாலிவுட்டில் பயோகிராபி (வாழ்க்கை வரலாறு) படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. சர்ப்ஜித், பாக் மில்கா பாக், பேண்டிட் குயின் என அதற்கு பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். அந்த வரிசையில் தவிர்க்க முடியாத வெற்றிப்படமாக ‘சாண்ட் கி ஆங்’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Here it is... our labour of love ...
— taapsee pannu (@taapsee) September 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
But this one is dedicated to all the mothers....#SaandKiAankh https://t.co/UPViMsyTMB
">Here it is... our labour of love ...
— taapsee pannu (@taapsee) September 23, 2019
But this one is dedicated to all the mothers....#SaandKiAankh https://t.co/UPViMsyTMBHere it is... our labour of love ...
— taapsee pannu (@taapsee) September 23, 2019
But this one is dedicated to all the mothers....#SaandKiAankh https://t.co/UPViMsyTMB
இதையும் படிங்க: "ஆர்தர் ஃப்ளெக் ஜோக்கரான கதை" - மனம் திறந்த இயக்குநர் டோட் பிலிப்ஸ்!