ஹைதராபாத்: சுஷ்மிதா சென் தனது காதலர் ரோமான் ஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இரு புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
ரோமான் ஷால் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து இரு புகைப்படங்களை பகிர்ந்துள்ள சுஷ்மிதா, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரோமான் ஷால். உன் அழகான இதயம் ஆசைப்படுவதை அடைய கடவுள் உனக்கு துணை இருப்பார். உன்னை அறிவதென்பது உன்னை காதலிப்பதாகும். நலனும் மகிழ்ச்சியும் உன் வாழ்வில் பெருகட்டும். அலிசா, ரினி சார்பாகவும் உனக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் மீது நாட்டமில்லாமல் அலிசா, ரினி என்ற இரு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துவரும் சுஷ்மிதா, 2018ஆம் ஆண்டு முதல் ரோமான் ஷாலை காதலித்து வருகிறார். இருவரும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கின்றனர். இந்தக் காதல் ஜோடி பகிரும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">