ETV Bharat / sitara

நினைவிடம் - அறக்கட்டளை அமைத்து மரியாதை செய்யும் சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினர் - சுஷாந்த் சிங்கின் நினைவிடம்

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வாழ்ந்த பாட்னா நகர் வீட்டை அவரது குடும்பத்தினர் நினைவிடமாக மாற்ற முடிவு செய்துள்ளனர். மேலும் சுஷாந்த் சிங் ராஜ்புத் (எஸ்.எஸ்.ஆர்.எஃப்) என்ற அறக்கட்டளையையும் உருவாக்கியுள்ளனர்.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்
author img

By

Published : Jun 28, 2020, 1:01 AM IST

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், ஜூன் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணம் திரைத்துறையினரிடமும், அவரது ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாது, பாலிவுட்டில் இருக்கும் வாரிசு அரசியல் பற்றியும் விரிவாக விவாதிக்கத் தூண்டியது. சுஷாந்த்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எனப் பார்க்காமல் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் இவரது உடற்கூறாய்வு அறிக்கையை மும்பை காவல் துறையினரிடம் ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழு கையெழுத்திட்டு சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், உடலில் எந்த வெளிப்படையான காயங்களும் தென்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தூக்கில் தொங்கியதால் உடலில் ஆக்ஸிஜன் இல்லாமல் இறப்பு ஏற்பட்டுள்ளது. அவரது நகங்களும் தூய்மையாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், அவரது இறப்பில் எந்தவித குழப்பமும் இல்லை, அது தற்கொலைதான் என உடற்கூறாய்வு அறிக்கை தெளிவுபடுத்தியது.

இதனையடுத்து சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினர் பாட்னா ராஜ்நகரில் சுஷாந்த் குழந்தையாக இருந்தபோது வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்ற முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாது சுஷாந்த் சிங் ராஜ்புத் (எஸ்.எஸ்.ஆர்.எஃப்) என்ற அறக்கட்டளையையும் ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து சினிமா, அறிவியல், விளையாட்டு மீதான ஆர்வம் கொண்ட அவரைப்போன்ற இளைஞர்களை இந்த அறக்கட்டளை ஊக்குவிக்கும் என தெரிவித்துள்ளனர்.

சுஷாந்தின் நினைவிடமாக மாறும் அந்த வீட்டில் அவரது உடமைகள், அவர் கண்டுபிடித்த 14" எல் எக்ஸ் 600 தொலைநோக்கி விமானத்தை போன்ற அறிவியல் கண்டுப்பிடிப்பு, புத்தகங்கள் என சுஷாந்தின் நினைவுப் பொருள்கள் இடம்பெறவுள்ளன.

சுஷாந்த்தை அவரது குடும்பத்தினர் செல்லமாக குல்ஷன் என்று அழைப்பர். சுஷாந்த் சிங் அவரது ஒவ்வொரு ரசிகர், ரசிகைகளை உண்மையில் நேசித்ததாக குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாது சுஷாந்தின் சமூக வலைதளப் பக்கங்களை அவரது குடும்பத்தினர் முறையாக பரமாரிக்கவுள்ளனர். சுஷாந்தின் ரசிகர்கள், ரசிகைகளுக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.